Former judges have condemned the act of deliberately leveling false allegations against the Election Commission a source:thamizhalai,ai generated
இந்தியா

”தேர்தல் ஆணையம் மீது மோசடி பழி” : திட்டமிட்ட பொய்ப் பிரசாரம் : காங்கிரசுக்கு இது அழகா?, முன்னாள் நீதிபதிகள் காட்டம்.!

தேர்தல் ஆணையம் மீது திட்டமிட்டு. பொய் குற்றச்சாட்டு சுமத்தி, மக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பதை ஏற்க முடியாது என்று முன்னாள் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Kannan

சிறப்பு தீவிர திருத்த பணிகள்

நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மாநிலங்கள் வாரியா மேற்கொள்ளப்பட்டு வருது. ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வருகிற இந்த பணிகள் மூலமா, இறந்து போனவங்க, இரண்டு இடங்களில் வாக்குரிமை இருக்கிறவங்க கண்டறியப்பட்டு அவங்களோட பெயர்கள் நீக்கப்பட்டு வருது.

13 கோடி பேரின் பெயர்கள் நீக்கம்

அந்த வகையில 13 கோடி பேரின் பெயர்கள் இதுவரை நீக்கப்பட்டு இருக்க. எஸ்ஐஆர் விவகாரத்தில தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு இருந்ததா செய்திகள் வெளியாச்சு.

எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டம்

ஏற்கனவே, எஸ்ஐஆர் விவகாரத்தில தேர்தல் ஆணையம், மத்திய அரசு மீது குற்றம் சுமத்தி வந்த எதிர்க்கட்சிகள் இதை ஆயுதமா கையில எடுத்துக் கிட்டு போராட்டங்களை முன்னெடுத்து வர்றாங்க.

டெல்லியில் காங்கிரஸ் தலைமையில இண்டியா கூட்டணி எம்பிக்கள், தேர்தல் ஆணைய முற்றுகை, காந்தி நினைவிடத்தில போராட்டம் என தலைநகரை போர்க்களமா மாத்தி வச்சி இருக்காங்க.

தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கை

எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கிற இந்த போராட்டங்களால, தேர்தல் ஆணையம் மீதான மிகப்பெரிய நம்பிக்கை மக்களிடையே சீர்குலைந்து விடுமோ என்ற அச்சம் எழுந்து இருக்கு.

முன்னாள் நீதிபதிகள் பகிரங்க கடிதம்

இந்த கவலைய வெளிப்படுத்துற விதமா, முன்னாள் நீதிபத்கள் 42 பேர் பகிரங்கமாக கடிதம் ஒன்ன எழுதி இருக்காங்க. வலுவான வார்த்தைகள் அடங்கிய இந்தக் கடிதத்தில, தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் பிற அரசியலமைப்பு நிறுவனங்களை சீர்குலைக்கற விதமா செய்யப்படும் பிரச்சாரங்கள் அபாயகரமானவை.

ஆதாரமற்ற "வாக்குத் திருட்டு", "திருடர்கள்", "சமரசம் செய்தவர்கள்"- ன்னு முத்திரை குத்தற,து ஜனநாயகத்தின் மீதான பொதுமக்களோட நம்பிக்கையை சிதைச்சிடும்.

இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது

அரசு நிறுவனங்களை விமர்சிப்பது என்பது ஜனநாயக உரிமை தான். ஆனால், இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது.

எஸ்ஐஆர் பணிகள் அப்படிங்கறது, துல்லியமான வாக்காளர் பட்டியல்களை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட சட்டப்பூர்வ செயல்முறை, இதை யாரும் மறுக்க முடியாது.

இதுபோன்ற சமயங்களில் மவுனம் என்பது நடுநிலையானது எனக் கூற முடியாது அப்படின்னு நீதிபதிகள் தங்களோட கவலைய வெளிப்படுத்தி இருக்காங்க.

சட்டப்பூர்வ அமைப்புகளை தாக்குவதா?

தாக்குதல் நடத்தும் மையப் புள்ளியாக தேர்தல் ஆணையம் இருந்தாலும், நாம் பெரிதும் மதிக்கும் நீதித்துறை மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகள் கூட இதில் இருந்து தப்பவில்லை.

தொடர்ந்து முன்வைக்கப்படும் விமர்சனங்கள், பகுத்தறிவு மிக்கவையாக தெரியவில்லை. உலகத்தோட மிகப்பெரிய ஜனநாயக நாட்டைச் சீர்குலைப்பதால் ஏற்படக்கூடிய பேரழிவு விளைவுகளைப் பற்றி யாரும் ஏன் கவலைப்படவில்லை.

சுயநல அரசியல் சக்திகள்

சுயநல அரசியல் சக்திகளால் திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு பிரச்சாரமாகவே இது இருக்கு. "நம்பிக்கையே ஜனநாயகத்தின் நாணயம்," தேர்தல்களைச் செல்லாததாக்கும் முயற்சிகள் அமைதியை குலைத்து, அராஜக சக்திகளுக்கு வலுக்கூட்டும்.

போராட்டத்தை முன்னெடுக்கும் காங்கிரஸ் மற்றும் சிஜேபியோட பெயர்களை குறிப்பிடமாக, கடுமையான விமர்சனங்கள் முன்னாள் நீதிபதிகள் முன்வச்சு இருக்காங்க.

நீதிமன்றங்களில் குற்றச்சாட்டு தெரிவிக்க தயக்கம் என்ன

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு நீதிமன்றங்களில் வைக்கப்படுவதில்லை, ஆனால் பத்திரிகையாளர்கள் சந்திப்புகளில் முன்வைக்கப்படுகின்றன. தேர்தல் ஆணையம் வாக்குமூலம் கேட்கும் போது, எதையும் தாக்கல் செய்வது கிடையாது.

தோல்வியடைந்தால் குற்றச்சாட்டு

தோல்விக்குப் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பழி சுமத்தப்படுகிறது. அதே இயந்திரங்களில் பெறப்பட்ட வெற்றிகள் பேசப்படுவது கிடையாது. சந்தேகம் எழுப்புவதும் இல்லை.

50 ஆண்டுகள் ஆண்ட கட்சி

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டை ஆண்ட ஒரு கட்சி, தங்களைத் தேர்ந்தெடுத்த அதே அமைப்பு முறைகேடாக நடத்தப்படுவதாக இப்போது கூறுகிறது, ஆச்சரியமாக இருக்கிறது.

விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு நீதிமன்றம் ஒரு நாடக மேடையாக மாறுகிறது, தீர்ப்பு வழங்கப்படும்போது, ​​தங்களுக்கு சாதகமா இல்லா விட்டா, விமர்சனம்.

நம்பிக்கையை சீர்குலைக்காதீர்கள்

அதாவது நீதிமன்றங்கள் மீது பொதுமக்கள் வைத்திருக்கிற நம்பிக்கையை சீர்குலைக்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. என்ற காட்டமான குற்றச்சாட்டையும் முன்னாள் நீதிபதிகள் வச்சிருக்காங்க.

இந்த கடிதத்தில், கையொப்பமிட்டவர்களில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் அடங்குவர். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான ஹேமந்த் குப்தா, பங்கஜ் மிட்டல், பி.சி.படேல், சுப்ரோ கமல் முகர்ஜி, பெர்மோத் கோஹ்லி ஆகியோரும் கையொப்பமிட்டு இருக்காங்க.

எஸ்ஐஆர் விவகாரத்தை கையில எடுத்து, தேவையில்லாம அரசு அமைப்புகள், நீதித்துறை மீது குற்றம் சுமத்தி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முன்னெடுத்து வர்ற போராட்டங்களை கண்டிக்கிற விதமா இந்த கடிதம் அமைஞ்சி இருக்கு.

அதுமட்டுமல்லாம, மக்களோட நம்பிக்கையை யாரும் சீர்குலைக்க கூடாது, அது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது அப்படிங்கறதையும், முன்னாள் நீதிபதிகள் தெளிவாக சுட்டிக் காட்டி இருக்காங்க.

எனவே, மத்திய பாஜக அரசை குறிவைக்கிறோம் என்ற பெயரில், நடத்தப்படும் இத்தகைய போராட்டங்களுக்கு மக்கள் தான் சரியான பதிலடி கொடுக்கணும்.

===========