From Darshan Gates to Laddu Counters: Garuda Map App Guides Tirupati Devotees Google
இந்தியா

திருப்பதி போறீங்களா? இனி வழி தெரியாமல் தவிக்க வேண்டாம்: ‘கருடா மேப்’ செயலி அறிமுகம்!

திருமலைக்கு வரும் பக்தர்கள் கோயில் வளாகம், தரிசன நுழைவாயில், லட்டு கவுன்டர் உள்ளிட்ட இடங்களை எளிதாகக் கண்டறிய ‘கருடா மேப்’ செயலியை அறிமுகம் செய்தது TTD ...

NARENDRAN K

கருடா மேப் செயலி அறிமுகம் :

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களை எளிதாகக் கண்டறிய, திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) ‘கருடா மேப்’ (Garuda Map) செயலியை அறிமுகம் செய்துள்ளது.

கோயில் வளாகம் மற்றும் திருமலையில் உள்ள முக்கிய இடங்களுக்குச் செல்லும் வழிகளைத் தெரிந்துகொள்ள இந்தச் செயலி பக்தர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

குரல் மூலம் வழித்தடம் தேடலாம்:

பக்தர்கள் செல்ல வேண்டிய இடத்தின் பெயரைச் செயலியில் டைப் செய்தோ அல்லது குரல் கட்டளை மூலமாகவோ தேடலாம்.

உதாரணமாக, முடி காணிக்கை செலுத்துவதற்கான கல்யாண கட்டாவைத் தேடினால், அருகிலுள்ள மையங்கள் மற்றும் அங்கு செல்வதற்கான வழிகள் திரையில் காட்டப்படும்.

நடந்து செல்லும் தூரம், பயண நேரமும் தெரியும்:

ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல நடந்து சென்றால் எவ்வளவு தூரம், வாகனத்தில் சென்றால் எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் செயலி தெரிவிக்கும்.

பக்தர்கள் எளிதாகச் சென்றடைய மாற்று வழிகளையும் அறிந்துகொள்ள முடியும்.

தரிசன நுழைவாயில் முதல் லட்டு கவுன்டர் வரை:

தரிசன நுழைவாயில்கள், காத்திருப்பு வளாகங்கள், லட்டு விநியோக மையங்கள், தங்கும் விடுதிகள், உணவு வழங்கும் இடங்கள், குடிநீர் வசதிகள் மற்றும் மருத்துவ மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பற்றிய தகவல்களை ஒரே செயலியில் பெறலாம்.

இதன் மூலம் திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்களுக்குத் தேவையான இடங்களை எளிதாகக் கண்டறிய முடியும்.

==================