From Domestic Worker to MLA: Kalitha Maji Sets a Record in the Ausgram Constituency! source:google,ai generated
இந்தியா

Domestic Worker turned MLA : வீட்டு வேலை செய்த பெண் To எம்எல்ஏ : அவுஸ்கிராம் தொகுதியில் சாதனை படைத்த கலிதா மாஜி!

Domestic Worker turned MLA: மேற்கு வங்கத்தில் வீட்டு வேலை செய்து வந்த கலிதா மாஜி, அவுஸ்கிராம் தொகுதியில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றுள்ளார்.

Kavitha prasanna

மேற்குவங்க தேர்தல் 2026

Domestic Worker turned MLA: அரசியல் என்பது வெறும் அதிகாரத்திற்கான களம் மட்டுமல்ல, அது சாமானிய மக்களின் வாழ்க்கையையும் மாற்றியமைக்கும் தளம் என்பதை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கலிதா மாஜி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

பிறர் வீடுகளில் பாத்திரம் தேய்த்தும், துணி துவைத்தும் வந்த ஒரு எளிய பெண்மணி, இன்று மக்கள் பிரதிநிதியாகச் சட்டமன்றத்திற்குள் நுழைய உள்ளார்.

வறுமைச் சூழலும் கடின உழைப்பும்

மேற்கு வங்க மாநிலம் குஸ்காரா நகரசபை பகுதியைச் சேர்ந்தவர் கலிதா மாஜி. மிகக் கடுமையான ஏழ்மை நிலையில் இருந்த இவர், தனது வாழ்வாதாரத்திற்காக நான்கு வீடுகளில் வீட்டு வேலைகளைச் செய்து வந்துள்ளார்.

துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது மற்றும் சமையல் செய்வது என நாள் முழுவதும் உழைத்தாலும், அவருக்கு மாதம் ரூ. 2,500 மட்டுமே வருமானமாகக் கிடைத்ததுள்ளது. இந்த வருமானத்தைக் கொண்டுதான் அவர் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.

அரசியல் பயணம் மற்றும் தோல்வி

இந்நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த கலிதா மாஜிக்கு, 2021 சட்டமன்றத் தேர்தலில் அவுஸ்கிராம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

அந்தத் தேர்தலில் அவர் தீவிரமாகப் பிரசாரம் செய்த போதிலும், திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 11,815 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இருப்பினும், அந்தத் தோல்வி அவரை முடக்கிவிடவில்லை.

பீனிக்ஸ் பறவையாய் மீண்டு வெற்றிபெற்ற கலிதா மாஜி

தற்போதைய தேர்தலில் பாஜக தலைமை மீண்டும் அவர் மீது நம்பிக்கை வைத்து அதே அவுஸ்கிராம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தது.

கலிதா மாஜி சூறாவளிப் பிரசாரம்

கடந்த காலத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட கலிதா மாஜி, இம்முறை தொகுதி முழுவதும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார்.

மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நெருக்கமாகச் செயல்பட்ட அவருக்கு, மக்கள் மகத்தான ஆதரவை வழங்கியுள்ளனர்.

தேர்தல் முடிவில் 1,07,692 வாக்குகள் பெற்று கலிதா மாஜி அபார வெற்றி பெற்றுள்ளார்.

ஒரு சாதாரணப் பெண்மணியை எம்.எல்.ஏ-வாக உயர்த்தி அழகு பார்த்துள்ள பாஜக மேலிடத்தின் இந்த நடவடிக்கை, சமூக நீதியை நிலைநாட்டியுள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கலிதா மாஜிக்கு குவியும் வாழ்த்து

"முயற்சியும் விடாமுயற்சியும் இருந்தால் எந்தச் சூழலில் இருப்பவர்களும் உயர்ந்த நிலையை அடையலாம்" என்பதற்கு கலிதா மாஜி ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார். அவருக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும், கட்சித் தொண்டர்களும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

=====