Gold Reserves Mines Discovery Found in Odisha 
இந்தியா

Gold: ஒடிசாவில் தங்கச் சுரங்கம் : 20,000 கிலோ வரை கிடைக்க வாய்ப்பு

Gold Reserves Mines Discovery Found in Odisha : ஒடிசா மாநிலத்தில், 20,000 கிலோ வரை தங்கம் கிடைக்கும் சுரங்கங்கள் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.

Kannan

கனிமவள திட்டங்கள் ஆய்வு :

Gold Reserves Mines Discovery Found in Odisha : ஒடிசாவில் கனிமவள திட்டங்களுக்கான பணிகளில், இந்திய புவியியல் ஆய்வு மையம் ஈடுபட்டது. அப்போது தியோகர், சுந்தர்கர், நபாரங்பூர், கியோன்ஜார், அங்குல் மாவட்டங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

தங்கச் சுரங்கங்கள் :

குறிப்பாக மயூர்பன்ஞ், மல்கன்கிரி, சாம்பல்பூர் மற்றும் பவுத் ஆகிய இடங்களில் சுரங்கங்கள்(New Gold Mines in Odisha) தோண்டி, தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இதை, அம்மாநில சுரங்கத்துறை அமைச்சர் விபூதி பூஷண் ஜெனா உறுதிபடுத்தி இருக்கிறார்.

20,000 கிலோ தங்கம் :

தங்கச் சுரங்கங்களில் இருந்து எவ்வளவு தங்கம் கிடைக்கும் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், 20,000 கிலோ வரை தங்கம்(Gold Discovery) இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 7 முதல் 8 லட்சம் கிலோ வரையிலான தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஒப்பிட்டு பார்க்கும்போது, தற்போது கண்டறியப்பட்ட தங்கச் சுரங்கங்கள் மூலம் உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது. எனினும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான கதவுகளை இந்த தங்கச் சுரங்கங்கள் திறந்து விட்டுள்ளன.

கனிம வள ஏற்றுமதி அதிகரிக்கும் :

ஏற்கனவே, 96 சதவீத குரோமைட், 52 சதவீத பாக்ஸைட், 33 சதவீத இரும்பு தாதுக்கள் ஒடிசாவில்(Odisha Gold Mines) இருந்தே வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தங்கமும் அங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்டால், கனிமவள ஏற்றுமதியில் ஒடிசா முக்கிய மாநிலமாக மாறும்.

கர்நாடக மாநிலம் கோலார்(Kolar Gold Mines) தங்க வயலில், 121 ஆண்டுகளில், 10 லட்சம் கிலோ தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

=======