CM Chandrababu Naidu accused, adulterating 6 million liters of ghee, distributing 20 crore laddus of prasadam Source : Google
இந்தியா

திருப்பதி லட்டு, 60 லட்சம் லிட்டர் கலப்பட நெய் : சட்டமன்றத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

திருப்​பதி தேவஸ்​தானத்​தில் கடந்த ஆட்​சி​யில் 60 லட்சம் லிட்​டர் நெய்​யில் கலப்​படம் செய்து 20 கோடி லட்டு பிரசாதங்​களை விநி​யோகம் செய்​த​தாக ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு குற்​றம்​சாட்​டி​னார்

Rohini

கூட்டத்தொடரில் நடந்த விவாதம்

CM Chandrababu Naidu on Tirupati Laddu Adulteration Case : ஆந்​திர பேர​வை​யில் நடந்து வரும் பட்​ஜெட் கூட்​டத்​தொடரில் திருப்​பதி ஏழு​மலை​யான் கோயிலில் கடந்த ஜெகன் ​மோகன் ரெட்​டி​யின் ஆட்​சி​யின்​ போது நெய்​யில் கலப்​படம் கலந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் அந்த லட்டுகள் கலப்படம் என்று தெரிந்தே வாங்​கிய​தாக தீவிர குற்றச்சாட்​டு​கள் முன் வைக்​கப்​பட்​டன. இதன் மீது சுமார் 3 மணி நேரம் விவாதம் நடை​பெற்​றது.

சந்​திர​பாபு நாயுடு உரை

இது குறித்து பேசிய முதல்வர் சந்​திர​பாபு நாயுடு கலப்பட நெய் விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்ற உத்​தர​வின் பேரில் சிறப்​புப் புல​னாய்​வுக் குழு விசா​ரணையை நடத்​தி​யதில் அதில் அதி​காரி​கள், ஊழியர்​கள், நிபுணர்​கள் என அனை​வரும் சேர்ந்தே இந்த தவறை செய்தனர் என்று குற்றம் சாட்டியிருந்தனர்.

ஆனால் அவர்கள் மீது ஆந்​திர அரசு தரப்​பில் நடவடிக்கை எடுக்​கலாம் என எனக்கு பரிந்​துரை செய்​தது.இதனை விசா​ரிக்​கவே ஒரு நபர் விசா​ரணை கமிஷன் தற்​போது அமைக்​கப்​பட்​டுள்​ளது என்றும் தெரிவித்தார்.

என்டிடிபி அறிக்கை

லட்டு தயாரித்த நெய்​யில் விலங்​கு​களின் கொழுப்​பு, மீன் கொழுப்பு ஆகியவை கலந்​திருப்​ப​தாக நானாக கூற​வில்​லை என்றும் ,என்டிடிபி கொடுத்த அறிக்​கையை ஆதா​ர​மாக கொண்டு அந்த விஷ​யத்தை வெளி​யில் கூறினேன் என்றும் தெரிவித்தார்.

துணை முதல்​வர் பவன் கல்​யாண் கூறியதாவது

நெய்​யில் விலங்கு கொழுப்பு கலந்திருந்​தது என்​பது என்​டிடிபி கொடுத்த அறிக்​கை​யில் இருந்தது என்றும் ஆனால் அது நெய்யே இல்லை என சிபிஐ அறிக்கை கொடுத்துள்ளது.என்றும் குறிப்பிட்டார்.