Gold Rate Today in Chennai (09-10-2025) 
இந்தியா

தாறுமாறாக உயரும் தங்கம் விலை : போட்டி போட்டு உச்சம் தொடும் வெள்ளி

Gold Rate Today in Chennai : தங்கத்தின் விலை நாளும் புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Kannan

புதிய உச்சம் தொடும் தங்கம்

Gold Rate Today in Chennai : சர்வதேச நிலவரங்கள், அமெரிக்காவின் வரி, விசா கெடுபிடிகள், தங்கத்தை வாங்கி குவிக்கும் மத்திய வங்கிகள் ஆகிய காரணங்களால் உலக அளவில் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது.

தாறுமாறாக விலை அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இம்மாத இறுதிக்குள், தங்கத்தின் விலை சவரன் 1 லட்ச ரூபாய் வரை அதிகரிக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகை பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சவரன் ரூ.91,200

அதன்படி நேற்று மாலை 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,385க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,080க்கும்(Gold Price Today) விற்பனை செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,400க்கும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,440க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,520க்கும் விற்பனையாகிறது.

மேலும் படிக்க : டாலரை பதம் பார்க்க தங்கத்தை குவிக்கும் சீனா : இனி விலை குறையாது

வெள்ளி விலை அதிகரிப்பு

வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் 171 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,71,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

====