Central Government Approves 8th Pay Commission in Tamil Image Courtesy : Central Government - 8th Pay Commission Hike
இந்தியா

8 வது ஊதியக்குழு உறுப்பினர்கள் நியமனம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Central Government Approves 8th Pay Commission : 8 வது ஊதியக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Bala Murugan

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Central Government Approves 8th Pay Commission : மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பிற சலுகைகளில் மாற்றங்களை ஆராய்ந்து பரிந்துரைக்க 8வது மத்திய ஊதிய ஆணையம் அமைக்கப்படுவதாக அரசாங்கம் ஜனவரி, 2025ல் அறிவித்தது. அதன்படி, 8 வது ஊதியக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று(அக்டோபர் 28) ஒப்புதல் அளித்தது.

பதவிகள் நியமனம்

முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் 8 வது ஊதிய குழு தலைவராக தேசாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன் உறுப்பினராக, ஐஐஎம் பெங்களூரு பேராசிரியர் புலாக் கோஷ் (பகுதி நேர) மற்றும் தற்போது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு செயலாளர் பங்கஜ் ஜெயின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒப்புதல், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே நிலுவையில் இருந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்தக் குழு தனது பரிந்துரைகளை 18 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும், மேலும் இந்த அமலாக்கம் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ்

இதுகுறித்து மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் கூட்டு ஆலோசனைக் குழு ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பிறகு ஊதியக் குழுவின் செயல்பாட்டிற்கான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டது என்றும் இந்தக் குழு தனது பரிந்துரைகளை 18 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதன்மூலம் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளார்.