Google's AI data center in Andhra Pradesh; Chandrababu Naidu hails the initiative  google
இந்தியா

ஆந்திராவில் Google-ன் AI டேட்டா சென்டர் : அடிக்கல் நாட்டினார் சந்திரபாபு நாயுடு!

ஆந்திராவை தொழில்நுட்ப மையமாக்கும் நோக்கில் Google தனது AI டேட்டா சென்டருக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது

Rohini

$15 பில்லியன் மதிப்பில் டேட்டா சென்டர்

ஆந்திரப் பிரதேசத்தை ஒரு முன்னணி டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்றும் நோக்கில் , Google தனது $15 பில்லியன் மதிப்பிலான AI டேட்டா சென்டருக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.

ஆந்திராவிற்கு ஏற்படும் வாய்ப்பு

உலகளவில் AI கம்ப்யூட்டிங் பவர் மற்றும் டேட்டா ஸ்டோரேஜுக்கான தேவை அதிகரித்து வருவதால், இந்த பிரம்மாண்ட திட்டம் அப்பகுதிக்கு ஒரு பெரிய வாய்ப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மாநிலத்தின் டிஜிட்டல் வியூகதின் ஒரு அங்கம்

முதலமைச்சர் N. சந்திரபாபு நாயுடு இந்த 1 GW (Gigawatt) வசதிக்கான அடிக்கல்லை நாட்டினார். இது 600 ஏக்கர் பரப்பளவில் அமைய இருப்பதாகவும் ,

ஆந்திரப் பிரதேசத்தின் டிஜிட்டல் வியூகத்தின் முக்கிய அங்கமான இது, மாநிலத்தை ஒரு முக்கிய டேட்டா மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்றும் நோக்குடன் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு சாதகமாக உள்ள காரணிகள்

மாநிலத்தின் கடலோர வசதி, நிலப்பரப்பு மற்றும் கவர்ச்சிகரமான கொள்கைகள் (Capital goods-ல் 100% SGST reimbursement, 10% capital subsidy, stamp duty மற்றும் power tariff விலக்குகள்) இந்த திட்டத்திற்கு சாதகமாக உள்ளன.

எதிர்கால சந்தைப் போட்டி மற்றும் வாய்ப்புகள்

இந்தியாவின் டேட்டா சென்டர் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. 2030-க்குள் $20-25 பில்லியன் வரை முதலீடுகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் டேட்டா பயன்பாடு, 5G, மற்றும் AI போன்ற காரணிகள் இந்த வளர்ச்சிக்கு பெரிய உந்துதலாக உள்ளன.

டேட்டா சென்டர் :முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்கள்

ஆனால், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலங்கானா போன்ற மாநிலங்களும் டேட்டா சென்டர் முதலீடுகளை ஈர்க்க தீவிரமாக உள்ளன. உதாரணமாக, மகாராஷ்டிராவில் அதானி குழுமம் ₹50,000 கோடி முதலீடு செய்து 1 GW hyperscale டேட்டா சென்டர் அமைக்க திட்டமிட்டுள்ளது.

தெலங்கானாவும் 5,189 MW திறனுக்கான MoUs-ல் கையெழுத்திட்டுள்ளது. AI, 2030-க்குள் இந்தியாவின் GDP-க்கு $500 பில்லியன் முதல் $4.71 டிரில்லியன் வரை பங்களிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

சவால்களும் எதிர்காலமும்

இந்த $15 பில்லியன் முதலீடு பெரிய சாத்தியக்கூறுகளைக் கொண்டிருந்தாலும், இவ்வளவு பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் சவால்களும் உண்டு. குறிப்பாக, 1 GW வசதிக்குத் தேவையான மின்சாரம், மும்பையின் ஆண்டு நுகர்வில் ஏறத்தாழ 50% அளவுக்கு இருக்கும். எனவே, சீரான, நம்பகமான மற்றும் பசுமை மின்சாரம் கிடைப்பது அவசியம்.

இந்த திட்டம், ஆந்திரப் பிரதேசத்தை இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தின் முன்னணியில் நிறுத்தும். AI, cloud services, டேட்டா சயின்ஸ் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவின் தொழில்நுட்ப தடம் இதுவரை சென்றிராத இடங்களுக்கு விரிவுபடுத்தும்.

============