Government commends Army soldier Meenakshi Sundaram, recipient Kirti Chakra; Cm Vijay presents a cheque for ₹48 lakh  google
இந்தியா

”கீர்த்தி சக்ரா மீனாட்சி சுந்தரம்” அரசு சார்பில் பாரட்டு! : 48 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார் முதல்வர் விஜய்..!

மீனாட்சி சுந்தரத்துக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலை தமிழ்நாடு அரசு பாரட்டியுள்ளது

Rohini

யார் இந்த மீனாட்சி சுந்தரம்

இந்திய ராணுவத்தின் 34 ரைபில் பீரங்கிப் படைப்பிரிவில் பணியாற்றிவருபவர் தான் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரரான மீனாட்சி சுந்தரம்

பயங்கர வாதிகளுக்கு எதிராக போரடி வீரர்களை காப்பாற்றியவர்

டிசம்பர் 19, 2024 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது.

பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் முகம் மற்றும் தோள்பட்டையில் குண்டு துளைத்தது இருப்பினும் , தனது கடமையிலிருந்து தவறாமல் தொடர்ந்து போராடி, பயங்கரவாதிகளை வீழ்த்தி , இதர ராணுவ வீரர்களின் உயிரை காப்பாற்றினார் மீனாட்சி சுந்தரம்

கீர்த்தி சக்ரா விருது வழங்கி பாராட்டு

ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் இந்த வீர தீர செயலை பாரட்டி இந்தியாவின் மிக உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருதினை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த 8-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கிச் சிறப்பித்தார்.

தமிழ்நாடு அரசு சார்பிலும் சிறப்பு

அவ்வகையில், உயரிய விருதான "கீர்த்தி சக்ரா" விருது பெற்ற ராணுவ வீரரான மீனாட்சி சுந்தரத்தின் வீர தீர செயல்களை பாராட்டி ,தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தமிழ்நாடு அரசின் சார்பில் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருது

இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய விருது கீர்த்தி சக்ரா விருதாகும். சிறந்த வீர தீர செயல்பாடுகளுக்காக வழங்கப்படும் உயரிய விருதாகும் .அதைப்போலவே தமிழ்நாடு அரசு அவர்கள் பெற்ற விருதுகளுக்கேற்ப ரொக்கப் பரிசு வழங்கிச் சிறப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

==========================