Greetings to all those who opposed the Emergency – Prime Minister Modi and Amit Shah in X posts.  google
இந்தியா

இந்திரா காலத்து எமர்ஜென்ஸி, அவசர நிலையை எதிர்த்த அனைவருக்கும் வணக்கம் : பிரதமர் மோடி, அமித்ஷா எக்ஸ் பதிவு...!

இந்தியாவின் அவசரநிலை ,உரிமைகளைப் பாதுகாப்பதில் எப்போதும் உறுதியுடன் இருக்கவும் நம்ம்மை தூண்டுவதாக உள்ளது

Rohini

அவசரநிலையை எதிர்த்த அனைவருக்கும் வணக்கம்

நாட்டில் அவசரநிலை பிறபிக்கப்பட்ட நாள் ,இந்திய ஜனநாயகம் கொடூரமான முறையில் நசுக்கப்பட்ட அந்த இருண்ட காலத்தை 'அரசியலமைப்பு படுகொலை தினம் இன்று நமக்கு நினைவூட்டுகிறது. என்று இந்தியாவின் அவசரநிலை காலகட்டம் குறித்து எக்ஸ் பதிவில் தெரிவித்திருக்கிறார்

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது

ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் எப்போதும் உறுதியுடன் இருக்க இது நம்மைத் தூண்டுகிறது. அவசரநிலையை எதிர்த்த அனைத்துச் சான்றோர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

சுதந்திரத்தின் மூலம் மகிழ்ச்சி கிடைக்கிறது; சுதந்திரத்தின் மூலம் ஒருவன் உன்னத நிலையை அடைகிறான்.

சுதந்திரத்தின் மூலம் நிறைவு கிடைக்கிறது; சுதந்திரத்தின் மூலம் ஒருவன் மிக உயர்ந்த நிலையை அடைகிறான்.

இந்திய வரலாற்றின் மிக இருண்ட காலகட்டங்களில் ஒன்றான 'அவசரநிலை' (Emergency) காலத்தில், ஜனநாயக விழுமியங்களை உறுதியுடன் பாதுகாத்த அனைவருக்கும் இன்று நாம் அஞ்சலி செலுத்துகிறோம்.

அவசரநிலை என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதலாக அமைந்தது. அக்காலத்தில் குடிமை உரிமைகள் முடக்கப்படல், கருத்துரிமை மீதான கட்டுப்பாடுகள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்படல், அத்துடன் நமது ஜனநாயகத்தின் அடித்தளமாகத் திகழும் நிறுவனங்கள் மீதான தாக்குதல் ஆகியவை அரங்கேறின.என இவ்வாறு பதிவிட்டுள்ளார்

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது

1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி என்பது இந்திய ஜனநாயக வரலாற்றின் ஒரு இருண்ட அத்தியாயமாகும்; அன்று இந்திரா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப் பசியும் ஆணவமும் அரசியலமைப்பின் ஆன்மா, பத்திரிகை சுதந்திரம் மற்றும் கருத்துரிமை ஆகியவற்றை நசுக்க முயன்றன.

'அரசியலமைப்பு படுகொலை தினம்' (Constitution Murder Day) அனுசரிக்கப்படும் இவ்வேளையில், ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக அவசரநிலையை எதிர்த்துப் போராடிய அனைத்து ஜனநாயகப் போராளிகளுக்கும் எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

ஜூன் 25-ஆம் தேதியை 'அரசியலமைப்பு படுகொலை தினம்' என்று மோடி அரசு அனுசரிப்பதன் நோக்கம், இந்த இருண்ட அத்தியாயத்தை நாட்டின் நினைவில் நிலைநிறுத்துவதும், எதிர்காலத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீது காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒருபோதும் இத்தகைய தாக்குதலை நடத்த முடியாது என்பதை உறுதி செய்வதுமே ஆகும்.என்று பதிவிட்டுள்ளார்