GST Tax Collections for June 2025 month 
இந்தியா

GST Tax 2025 : ஜிஎஸ்டி வசூல் உச்சம் : ஜூன் மாதம் 1.84 லட்சம் கோடி

GST Tax Collection June 2025: நாட்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த மாதம் 6.2% உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

Kannan

GST Tax Collection June 2025: மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது. இதனால் மத்திய அரசு, மாநில அரசுகளின் வருவாய் அதிகரித்து இருக்கிறது.

ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு :

கடந்த மாதம் அதாவது ஜூனில் ஜிஎஸ்டி வசூல் 6.2% உயர்ந்து ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தோடு ஒப்பிடுகையில், 6.2 சதவீத அதிக வருவாய் கிடைத்து உள்ளது.

கடந்த ஏப்ரல் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலானது. தொடா்ந்து 2-ஆவது மாதமாக கடந்த மே மாதம் ரூ.2.01 லட்சம் கோடி வருவாய் கிடைக்கப் பெற்றது.

ஜிஎஸ்டி வசூல் 1.84 லட்சம் கோடி :

ஜூன் மாதம் மொத்தம் ரூ.1.84 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானதாக(GST Tax Collection June 2025) அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு பரிவா்த்தனைகளில் இருந்து ரூ.1.38 லட்சம் கோடியும், இறக்குமதியில் இருந்து ரூ.45,690 கோடியும் கிடைக்க பெற்றுள்ளது. இவை முறையே 4.6 சதவீதம், 11.4 சதவீத அதிகமாகும்.

ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.34,558 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.43,268 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.93,280 கோடி, கூடுதல் வரி ரூ.13,491 கோடியாகும்.

தமிழகத்தில் அதிக வசூல் :

தமிழகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், கா்நாடகம், ராஜஸ்தான் போன்ற பெரிய மாநிலங்கள் 4 முதல் 8 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளன.

=====