GTRI Suggestions To Protect India from US Tariffs : ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் ஊக்கத் திட்டங்களை மீண்டும் தொடங்குதல், சுங்க சீர்திருத்தங்கள், அர்ப்பணிக்கப்பட்ட இ-காமர்ஸ் மையங்கள், வலுவான வர்த்தக பணியகங்கள் உள்ளிட்டவற்றை அரசுக்கு ஜிடிஆர்ஐ பரிந்துரைக்கிறது.
இந்தப் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால், வேலைகள் பாதுகாக்கப்படும் என்பதுடன் இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்திறன் தக்கவைக்குப்படும் என்று ஜிடிஆர்ஐ நம்புகிறது.
இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத அமெரிக்க வரிகள், ஆகஸ்ட் 27 அன்று அமலுக்கு வந்தது. ஜிடிஆர்ஐ, ஆகஸ்ட் 1, 2025 அன்று அதே 50% வரிகளை எதிர்கொண்ட பிரேசிலை உதாரணமாக குறிப்பிட்டுள்ளது. அந்நாடு விரைவாக வலுவான ஆதரவு நடவடிக்கைகளின் மூலம் இதற்கு பதிலளித்துள்ளது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
வாரங்களுக்குள் கடன் உதவி, வரி விலக்குகள், அரசு கொள்முதல் மற்றும் WTO நடவடிக்கையுடன் இப்பிரச்சினையை சமாளித்து வருகிறது. எனினும் இந்தியா தனது ஏற்றுமதியாளர்களுக்கு இதுவரை நிவாரணம் அறிவிக்கவில்லை என்று ஜிடிஆர்ஐ தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக பணியகங்கள் குறைந்த நிதியுடன் உள்ளன. பெரும்பாலும் வர்த்தக நிபுணத்துவம் குறைந்த பொதுவான தூதர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தியா இந்த அமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்றும் அதாவது திறமையான வர்த்தக தொழில்முறை மக்களுடன் வெளிநாட்டு வர்த்தக பணியகங்களை மறுசீரமைக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது.
துறைசார்ந்த அறிவுடன் வர்த்தக தொழில்முறை வல்லுநர்களை அனுப்பி, நிதியை கணிசமாக அதிகரிப்பதன் மூலம் வலுவான மற்றும் தொழில்முறைப்படுத்தப்பட்ட நெட்வொர்க், வாங்குநர் இணைப்புகளை உருவாக்கி, ஏற்றுமதியாளர்களுக்கு உள்ள தடைகளை எதிர்கொள்ள முடியும்என்பதும் அதன் பரிந்துரைகளில் ஒன்று.
மேலும் படிக்க : கூடுதல் வரி விதிப்புக்கு தடை : டிரம்ப் பிடிவாதம், மேல்முறையீடு
புதிய சந்தைகளுக்கு ஏற்றுமதிகளை பன்முகப்படுத்துவது என்பது ஓர் இரவில் நடக்காது என்பது ஏற்கத்தக்கது. இருப்பினும், மீண்டும் தொடங்கிய திட்டங்கள், எளிமைப்படுத்தப்பட்ட செயல்முறைகள் மற்றும் விரிவடையும் நிதியின் மூலம் செலவுகளை 5-10% குறைத்தால், அமெரிக்க சந்தையைத் தாண்டி படிப்படியாக விரிவடைய முடியும் என்று ஜிடிஆர்ஐ நம்புகிறது.
தாங்கள் பரிந்துரைத்த சீர்திருத்தங்கள் பிரச்சினையை தற்காலிகமாக சரிசெய்வதறகு முயற்சி அல்ல என்றும் , இந்தியாவின் ஏற்றுமதி எதிர்காலத்திற்கான உத்தியோகபூர்வ முதலீடுகள், விரைந்து செயல்படுத்தப்பட்டால், அவை நம்பிக்கையை மீட்டெடுக்கும், வேலைகளைப் பாதுகாக்கும், மற்றும் இந்தியப் பொருட்களை உலகளாவிய போட்டித்திறனுடன் உருவாக்கும் என்று ஜிடிஆர்ஐ தெரிவித்துள்ளது.