கூடுதல் கட்டணம் செலுத்த உத்தரவு
விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கட்டணம் செலுத்த ஹஜ் குழு உத்தரவிட்டுள்ளது.
நீடிக்கும் மேற்காசிய போர்
தொடர்ந்து நீடித்து வரும் ஈரான் அமெரிக்கா போரால் மேற்காசிய நாடுகள் பெரும் பதற்றத்தை சந்தித்து வருகின்றன. இந்த போரால் உலக நாடுகள் பலவற்றிலும் எரிபொருள் தட்டுப்படைந்து ஏற்பட்டுள்ளது.
இதனால் உலக வர்த்தக சந்தையும் பெரிதளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றது
எரிபொருள் உயர்வு : விலை ஏற்றம்
இந்த ஈரான் போர் காரணமாக உலக அளவில் விமான எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள கடும் உயர்வு காரணமாக, இந்த ஆண்டு ஒவ்வொரு ஹஜ் பயணியிடமும் வசூலிக்கப்படும் விமானக் கட்டணத்தை இந்திய ஹஜ் குழு ரூ.10,000 உயர்த்தியுள்ளது.
விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணகளுக்கு விமான கட்டணத்தை அதிகமாக வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில்
அதனை கட்டுப்படுத்த தீவிர பேச்சுவார்த்தைகள் மூலம் விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
விலை உயர்வு குறித்து ஹஜ் குழுவின் அறிக்கை
இந்த விலை ஏற்றம் குறித்து ஹஜ் குழுவின் சுற்றறிக்கை கூறும்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, 2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணத்தின் விமானக் கட்டணத்தில் ஒருமுறை மட்டும் செய்யக்கூடிய திருத்தத்திற்குச் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக இந்திய ஹஜ் குழு வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
திருத்தப்பட்ட விமான கட்டண முறை
திருத்தப்பட்ட இந்த விமானக் கட்டணத்தின்படி, பயணிகள் புறப்படும் இடம் எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு பயணியும் கூடுதலாக 100 அமெரிக்க டாலர் தொகையைச் செலுத்த வேண்டும்.
அதாவது 400 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்த்த வேண்டும் என்று விமான நிறுவனங்கள் விடுத்த தீவிர கோரிக்கைகளை, ஆராய்ந்த பிறகு கூடுதல் விமானக் கட்டணத் தொகையான ரூ.10,000-ஐ மே 15-க்குள் செலுத்த வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
===========