ANI
இந்தியா

இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது : மத்திய அரசு உறுதி

போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

Kannan

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் உலக அளவில் போர் பதற்றதை அதிகரிக்க செய்து உள்ளது.

ஈரானுக்கு ஆதரவாக சில நாடுகள் களமிறங்க வாய்ப்பு இருப்பதால், 3வது உலகப் போர் மூண்டு விடுமோ என்ற பீதியும் அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தியை தற்காலிமாக நிறுத்தியுள்ள ஈரான், எண்ணெய் கப்பல்கள் வந்து செல்லும் நீரிணை பகுதியை மூடி வைத்துள்ளது.

இதனால், கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி, ஒரு பீப்பாய் 79 டாலராக உள்ளது.

போர் சூழல் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்து இருக்கிறது.

இதுபற்றி கருத்து தெரிவித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று உறுதியளித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் பிரச்சினையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பாஜக ஆட்சியில் இறக்குமதியை பன்முகப்படுத்தி உள்ளோம்.

எண்ணெய் நிறுவனங்கள் பல வாரங்களுக்கு தேவையான எரிபொருளை கைவசம் வைத்துள்ளன.

கச்சா எண்ணெய் கொண்டு வர ஹார்மூஸ் நீரிணையை நாம் பயன்படுத்துவது இல்லை.

பல வழகளில் எண்ணெய் இறக்குமதி தொடர்ந்து, தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது.

எனவே, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், எரிபொருள் வினியோகத்தை மத்திய அரசு சீராக நிர்வாகிக்கும் என்று அமைச்சர் ஹர்தீப் விளக்கம் அளித்துள்ளார்.

=====