Air traffics disrupted as Hayli Gubbi volcanic ash eruption in Ethiopia blankets of India Google
இந்தியா

வெடித்தது ‘Hayli Gubbi’ எரிமலை : டெல்லியை சூழ்ந்த சாம்பல் மேகங்கள்

Hayli Gubbi Ethiopia Volcanic Eruption Update in Tamil : எத்தியோபியாவில் 12,000 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து எரிமலை சாம்பல், இந்தியாவை சூழ்ந்துள்ளதால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Kannan

ஹேலி குப்பி ‘Hayli Gubbi’ எரிமலை

Hayli Gubbi Ethiopian Volcano Eruption Reaches Delhi : கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அபார் என்ற மாகாணத்தில் ஹேலி குப்பி என்ற எரிமலை உள்ளது. இது சுமார் 12,000 ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம் (நவம்பர் 23) வெடித்தது.

வானில் பரவிய சாம்பல் புகை

எரிமலையில் இருந்து வெளிப்பட்ட சாம்பல் சிவப்புக் கடல் வழியாக ஏமன், ஓமன் மற்றும் வடக்கு பாகிஸ்தான் நாடுகளில் பரவியது. பின்னர் வடக்கு ஐரோப்பிய கடல் பகுதியை தாண்டிய சாம்பல் புகை இந்தியாவிற்குள் புகுந்துள்ளது.

இந்தியாவிலும் சாம்பல் புகை

குஜராத், டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசத்தை நோக்கி சாம்பல் புகை நகர்ந்து வருகிறது. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வளிமண்டலத்தின் காற்றுடன் சாம்பல் மேகங்கள் நகர்ந்து வருகின்றன. இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், விமான நிறுவனங்கள் சாம்பல் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.

விமான சேவை பாதிப்பு

அதன்படி, ஆகாசா ஏர், இண்டிகோ, கே.எல். எம் ஆகிய விமான நிறுவனங்கள் தங்களது சில விமான சேவைகளை ரத்து செய்துள்ளன. அதன்படி இதுவரை 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த கரும்புகை டெல்லி பகுதியில் இருந்து சீனாவை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இன்று மாலை 7.30 மணிக்குள் சாம்பல் புகை முற்றிலுமாக டெல்லியை விட்டு விலகி விடும்.

டெல்லியில் காற்று மாசு

ஏற்கனவே காற்று மாசு அபாய கட்டத்தை தாண்டி விட்டதால், டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காலை நடைபயணம், மைதானங்களில் விளையாடுவது போன்றவற்றையும் தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பல் புகையால் மேலும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் டெல்லி மக்களுக்கு எழுந்துள்ளது. ஆனால் கடல் மட்டத்தில் இருந்து வெகு தொலைவில் சாம்பல் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

==========