Heavy rains in Kerala: Orange alert for 12 districts; rising risk of landslides. google
இந்தியா

கேரளாவில் கனமழை : 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை : மண்சரிவு, 20 ஆக பலி உயர்வு, நிவாரண முகாம்களில் மக்கள்!

இடுக்கி காசர்கோடு என 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மலையோரப் பகுதியில் இருப்பவர்கள் பாதுக்காப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது

Rohini

கேரளாவில் கனமழை, 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது, மலையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்,  

கடந்த 3 நாளில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது, இதுவரை 7 பேரை காணவில்லை. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது

தாழ்வான பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன

கேரளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பத்தனதிட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.

குறிப்பாக இந்த மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளான குட்டநாடு, கோட்டயத்தின் பாலா, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ராணி மற்றும் கோன்னி ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கடுமையான வெள்ள பாதிப்பு , மக்களில் இயல்பு வாழ்க்கை முடக்கம்

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்ததால் வீடுகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது , இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது

கனமழை எதிரொலி, ஆரஞ்சு எச்சரிக்கை

இந்த நிலையில் இன்றும் மத்திய கேரளப் பகுதிகளான பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி காசர்கோடு என 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக மலையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியில் மீட்பு குழுவினர்

கனமழையானது தொடர்ந்து பெய்து வருவதால் ,மாவட்ட நிர்வாகங்கள் அந்தந்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்காணித்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

அதேபோல், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ள பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளாவை புரட்டி போட்ட வெள்ளம்; நிவாரண முகாம்களில் பொதுமக்கள்

இன்று காலை நிலவரப்படி, பம்பை மற்றும் மணிமலையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளநீர் சற்று வடியத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும்,

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அந்தந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மேற்பார்வையிட்டு தேவையான நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்

பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் முதல்வர் சதீஷன்

கன்மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தின் ராணி மற்றும் ஆரண்முளா பகுதிகளுக்கு கேரள முதலமைச்சர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, ஆறுதல் கூற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

=============================