How much is the fee for re-evaluation of exam results, re-examination, answer sheets, and what is the truth?  google
இந்தியா

CBSE தேர்வு முடிவு : விடைத்தாள் மறுமதிப்பீடு எவ்வளவு கட்டணம், உண்மை என்ன ?

நடந்து முடிந்த தேர்வில் விடைத்தாள் நகல் பெற, ஆன்லைன் மூலம் விடைத்தாளைப் பார்க்க லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்

Rohini

ஆன் ஸ்கீரின் மார்க்கிங் முறை: குழப்பத்தில் மாணவர்கள்

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 13-ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டு மாணவர்கள் விடைத்தாள்களை ஆசிரியர்கள் கையால் திருத்துவதற்குப் பதிலாக அந்த விடைத்தாள்களின் ஸ்கேன் பிரதிகளை கணினியில் பார்த்து மதிப்பீடு செய்யும் 'ஆன் ஸ்கீரின் மார்க்கிங் முறை' (ஓஎஸ்எம்) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

ஆனலைனில் விடைத்தாளை பார்க்க மாணவர்கள் விண்ணப்பம்

ஆன் ஸ்கீரின் மார்க்கிங் முறையில் விடைத்தாள் நகல் பெற, ஆன்லைன் மூலம் விடைத்தாளைப் பார்க்க லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆன்லைனில் விடைத்தாள்கள் மங்களாக இருப்பதாக ஏராளமானோர் புகார் அளித்திருக்கிறார்கள்.இதற்கிடையே, ஒரு பாடத்துக்கான விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரியப்படுத்தியுள்ளனர்

சமுகவளைத்தளங்களில் பரவிய வதந்தி

இந்தநிலையில் , நேற்று சமூக வலைத்தளங்களில், ஒரு பாடத்துக்கு மறுமதிப்பீடு செய்ய ரூ.69,420 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று சிபிஎஸ்இ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் பதற்றம் அடைந்திருந்தனர்

விடைத்தாள் மறுமதிப்பீடு ரூ.300 மட்டுமே

இந்தநிலையில் ,விடைத்தாள் நகல் பெற ரூ.300 கட்டணம் என்றும் ஒவ்வொரு விடையையும் மறுமதிப்பீடு செய்ய தலா ரூ.25 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ தரப்பு விளக்கம்

இது குறித்து சிபிஎஸ்இ தரப்பு விளக்கம் அளித்தது தொடர்பாக ,அது உண்மையல்ல என்றும், தொழில்நுட்பக் கோளாறால் அவ்வாறு காட்டப்பட்டதாகவும் தகவர்லகள் வெளியாகியுள்ளன.

மேலும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளைக் கருத்தில் கொண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களைப் பெறுவதற்கான கடைசி தேதி ஞாயிற்றுக்கிழமை (மே 24) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது

தொடர்ந்து எழுந்து வரும் புகார்கள்

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் மறு மதிப்பீட்டுக்கான விண்ணப்பப் பதிவு என்ற இணையதளம் மே 19-ஆம் தேதி முதல் தொடங்கியது. இருப்பினும், இந்த இணையதளத்தில் தொடர்புடைய பக்கத்தை முறையாகத் திறக்க இயலவில்லை. அது மீண்டும் மீண்டும் முடங்குகிறது.

இணையதளத்தில் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத அளவிலான பயன்பாட்டுச் சுமை மற்றும் அங்கீகரிக்கப்படாத நபர்களின் குறுக்கீட்டு முயற்சிகள் காரணமாக, இணையதளம் தொடர்ந்து தொழில்நுட்பப் பிரச்னைகளைச் சந்தித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

======================