How will constituency delimitation affect southern states: What does this amendment bill say?  google
இந்தியா

தொகுதி மறுவரையறை தென்மாநிலங்கள் பாதிக்கப்படுவது எவ்வாறு : இந்த திருத்த மசோதா கூறுவது என்ன?

மக்களவை தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவிற்கு திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும் , கருப்பு உடை அனைத்தும் மக்களவையில் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

Rohini

தொகுதி மறுவரையறை : எதிர்ப்பு

மக்களவையில் தென் மாநிலங்களைப் பலவீனப்படுத்தி, வட மாநிலங்களுக்கு கூடுத வலுச் சேர்க்கும் மக்களவைத் தொகுதி மறுவரையறை திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு நாடளுமன்றதில் திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்,

மக்களவையில் எதிர்ப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர், திமுகவினர் கருப்பு உடை அனைத்தும் , மசோதாவிற்கு எதிரான வாக்களிப்பில் ஈடுபட்டனர்,தமிழ்நாட்டை பொறுத்த வரையில் திமுகவினர் கருப்பு உடை அணிந்தும், நகலை எரித்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

2011 கணக்கெடுப்பின்படி அமல்படுத்த மத்திய அரசு திட்டம்

இந்த அமர்வில் 2023 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதே முதன்மை நோக்கமாக மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால் 2029 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டுவர, 2027 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பதிலாக 2011 கணக்கெடுப்பின்படி அமல்படுத்த மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

இதனிடையே, மக்களவையில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் வகையில் என்ற பெயரில், தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவையும் உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பெண்களுக்கான இடஒதுக்கீடு

அதன்படி, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை விகிதாசார அடிப்படையில் 50 சதவிகிதத்தை உயர்த்தி 543 லிருந்து 850 ஆக அதிகரிக்கும் முன்மொழிவும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் ,இதில் ,பெண்களுக்கு 273 இடங்கள் (33%) ஒதுக்கப்படும்.

மேலும், பட்டியலினத்தவருக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 84 தொகுதிகள் 134 ஆகவும், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 47 தொகுதிகள் 70 ஆகவும் உயரும். இதிலும் 33 சதவிகித தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

'பெண் சக்திக்கு' ஆதரவான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகளின் அவைத் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எ எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தொகுதி மறுவரையறை :தென் மாவட்டங்களுக்கு விதிக்கப்படும் தண்டனை போன்றது

தற்போது தொடர்ந்து மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், அது தென் மாநிலங்களுக்கு விதிக்கப்படும் தண்டனையாக அமையும் எனக் கருதி, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை கூடாது என்று 1976 ஆம் ஆண்டு சட்ட பிரிவு 82 -ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் தற்போது 2001 -லும் வட மாநிலங்களில் மக்கள்தொகை கட்டுக்குள் வராததால் மேலும் 25 ஆண்டுகள் சட்டத் திருத்தம் நீட்டிக்கப்பட்டது.

முன்பை விட 3.6 சதவிகிதம் குறைவு ஏற்படும்

அதாவது 850 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் உ.பி., பிகார் போன்ற மாநிலங்களில் பிரதிநிதிகள் எண்ணிக்கை 43.1 சதவிகிதமாக உயரும். தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதிகள் எண்ணிக்கை முன்பைவிட 3.6 சதவிகிதம் குறைந்து 20.7 சதவிகிதமாகிவிடும்.

தற்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்

மகளிர் இடஒதுக்கீட்டுக்கு 100 சதவிகிதம் ஆதரவை தெரிவித்துள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அத்துடன் இணைத்து நிறைவேற்றத் திட்டமிடப்படும் மக்கள்தொகை மறுவரையறை திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.

மேலும், தற்போதைய மக்களவை எண்ணிக்கையான 543-ல் இருந்தே மகளிருக்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் முதன்மை கோரிக்கையாக உள்ளது.

============