IBPS Clerk Job Vacancy Notification 2025 in Public Sector Bank in India 
இந்தியா

வங்கிகளில் 10,277 காலிப் பணியிடங்கள் : டிகிரி படித்தால் போதும்

IBPS Clerk Job Vacancy Notification 2025 : பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10,277 இளநிலை உதவியாளர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Kannan

வங்கிகளில் காலிப்பணியிடங்கள் :

IBPS Clerk Job Vacancy Notification 2025 : எஸ்.பி.ஐ.யை தவிர்த்து நாட்டில் உள்ள 11 பொதுத்துறை வங்கிகளில் நிலவும் காலிப் பணியிடங்களை ஐ.பி.பி.எஸ் எனப்படும் தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 10,277 கிளர்க் (எழுத்தர்) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 894 காலிப்பணியிடங்கள் :

இதில், தமிழகத்தில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள்(IBPS Clerk Vacancy in Tamilnadu) இருப்பதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இப்பணிக்கு இன்று முதல் வரும் 21ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.ibps .in) வாயிலாக விண்ணப்பிக்கலாம். எஸ்சி,எஸ்டி. மாற்றுத் திறனாளி பிரிவினர் 175 ரூபாயும், மற்றவர்கள் 850 ரூபாயும் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்வில், ஆங்கில பாடத்தை தவிர மற்ற பாட வினாக்களுக்கு தமிழில் பதில் எழுத முடியும்.

அக்டோபரில் முதலநிலைத் தேர்வு :

இப்பணிக்கான முதல்நிலைத் தேர்வு வரும் அக்டோபர் மாதமும், அதில் தகுதி பெறுபவர்களுக்கு நவம்பர் மாதம் முதன்மைத் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நாடு முழுவதும் 6,128 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியான நிலையில், நடப்பாண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு

மாத ஊதியம் ரூ. 64,480 வரை...

மாத ஊதியம் 24,050 முதல் 64,480 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு(IBPS Clerk Salary 2025) இருக்கிறது. 21.08.2025ன்படி வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இதில் தளர்வுகள் இருக்கும்.

====