IDBI Bank Recruitment 2026 Bank has announced a job opportunity for 1100 vacant posts. google
இந்தியா

1,100 காலி பணியிடங்களுக்கு ஐ.டி.பி.ஐ. வங்கி வேலைவாய்ப்பு : டிகிரி முடித்திருந்தால் போதும்

IDBI Bank Recruitment 2026 Apply : ஐ.டி.பி.ஐ வங்கி 1100 காலிப்பணியிடங்களுக்குக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது .இதற்கு டிகிரி முடித்தவர்கள் தகுதியானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Rohini

விண்ணப்பிக்கும் முறை :

IDBI Bank Recruitment 2026 Apply Online : இந்த காலிப்பணியிடங்களுக்கான தேர்விற்கு https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

விண்ணப்பக் கட்டணம்

ஐ.டி.பி.ஐ வங்கியின் தற்போதைய காலிபணியிடங்களுக்கான தேர்விற்கு கட்டணமாக எஸ்.சி / எஸ்.டி / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. ௨௫௦ என்றும் மற்றவர்களுக்கு ரூ. 1050 என்றும் நிர்ணயம் செய்ப்பட்டுள்ளது

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.03.2026

19.03.2026இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் விண்ணப்பிக்க அதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் மேலும் தெரிந்து கொள்ளலாம்.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 1100

கல்வி தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .மேலும் 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுச் சலுகை உண்டு என்றும் அதில் தெரிவிக்கப்ட்டுள்ளது

தேர்வு செய்யப்படும் முறை

அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் என்றும்ஆன்லைன் தேர்வில் திறனறிதல் (Reasoning) – 60 வினாக்கள், கணிதம் (Quantitative Aptitude) – 40 வினாக்கள், ஆங்கிலம் (English Language) – 40 வினாக்கள், பொது அறிவு (General/ Economy/ Banking Awareness) – 60 வினாக்கள் என 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு இருக்கும்.

தேர்வு 2 மணி நேரத்திற்கு நடைபெறும். வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கேள்விகள் கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்து . தேர்வில் தவறான வினாக்களுக்கு தலா 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது