உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்
உலகின் சிறந்த பல்கலைகளின் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் லண்டனை சேர்ந்த குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் (க்யூ.எஸ்) என்ற தனியார் கல்வி ஆய்வு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
அதன்படி ,2027ம் ஆண்டிற்கான உலக பல்கலைகங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது., 106 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
இந்திய கல்வி நிறுவனங்கள் : டெல்லிக்கு முதலிடம்
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, சிறந்த இந்திய கல்வி நிறுவனங்கள் பட்டியலில் டெல்லி ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இது உலக அளவில் ஐந்து இடங்கள் முன்னேறி 118வது இடத்தைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் ஐஐடி பாம்பே 129-வது இடத்திலிருந்து 134-வது இடத்திற்கு பின் சென்றுள்ளது
உலகின் முதல் டாப் 5 பல்கலைக்கழகங்கள்
1.மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் 15வது ஆண்டாக இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
2.ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்,
3. இம்பீரியல் கல்லூரி,
4. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
5. ஹார்வர்டு பல்கலைக்கழகம்.
சிறந்த இந்திய நகரங்கள் பட்டியல்
1.ஐஐடி டெல்லி - 118 இடம்
2.ஐஐடி பாம்பே-134வது இடம்
3.ஐஐடி-மெட்ராஸ்-170வது இடம்
4.ஐஐடி-கரக்பூர் -205வது இடம்
5. ஐஐடி-கான்பூர்- 221வது இடம்
6.இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு-221வது இடம்
7.டில்லி பல்கலைக்கழகம்- 322வது இடம்
8.ஐஐடி-ரூர்க்கி-335வது இடம்
9. ஐஐடி- குவஹாத்தி- 349வது இடம்
10. உயிரி தொழில்நுட்பம் பல்கலை, ஹிமாச்சலப் பிரதேசம்- 452வது இடம்
ஒட்டுமொத்தமாக, 26 இந்தியப் பல்கலைக்கழகங்கள் தங்கள் தரவரிசையை மேம்படுத்தியுள்ளன, ஒன்பது மாற்றமின்றி உள்ள நிலையில் ,15 பல்கலைகழகங்கள் சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது .மேலும் இந்த அறிக்கையில் 52 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோல், தனியார் பல்கலைக்கழகங்களும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன.
தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் சிறந்த இடத்திற்கு முன்னேற்றம்
உதாரணமாக, வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் 94 இடங்கள் முன்னேறி உலக அளவில் 597-வது இடத்தையும், பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும்
அறிவியல் நிறுவனம் 93 இடங்கள் முன்னேறி 575வது இடத்தையும் பிடித்தன. இவற்றோடு , ஷூலினி பல்கலைக்கழகம் 51 இடங்கள் முன்னேறி இந்தியாவின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
======================