தென்மேற்கு பருவமழை :
IMD Rainfall Data 2025 : இந்தியாவில் தென்மேற்கு பருவமழை, மே கடைசி வாரத்தில் தொடங்கியது. தாழ்வு மண்டலங்கள் தோன்றும் போது, மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். மற்ற நேரங்களில் மிதமான மழை பெய்யும். இந்தநிலையில், ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பெய்துள்ள மழையளவு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மூலம் பல்வேறு தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
ஜார்க்கண்டில் அதிக மழைப்பொழிவு :
அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் வழக்கத்தை விட 71% அதிகமாக மழை பெய்துள்ளது, வழக்கமாக 348 மில்லி மீட்டர் அளவுக்கு மழை இருக்கும். இந்த ஆண்டுத் 595.8 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது.
ராஜஸ்தானிலும் அதிக மழைப்பொழிவு :
வியப்பூட்டும் வகையில் வறண்ட மாநிலமான ராஜஸ்தானிலும் மழையளவு அதிகரித்து இருக்கிறது. வழக்கமாக இஙுக் சுமார் 125.மில்லி மீட்டர் அளவுக்கு மட்டுமே மழை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு 271.9 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது, இது வழக்கத்தை விட 116% அதிகம்.
மேலும் படிக்க : தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை : கோவை, நீலகிரியில் கனமழை
வடகிழக்கில் மழைப்பொழிவு குறைவு :
அதேசமயம், வடகிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில், அதிக அளவு மழை பெய்யவில்லை. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சாதாரண மழைப்பொழிவை மட்டுமே பெற்றுள்ளன. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, பஞ்சாப், நாகாலாந்து, கோவா எதிர்பார்த்த மழை இல்லை
தென் மாநிலங்களை ஏமாற்றும் பருவமழை :
தென் மாநிலங்களான கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆகிய மாநிலங்களில் மழைப்பொழிவு குறைந்து(Tamil Nadu Rainfall Data) உள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வர இன்னும் நாட்கள் இருப்பதால், இந்த மாநிலங்களுக்கும் போதிய மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
===