இந்தியாவில் பருவ மழைகள்
Southwest Monsoon vs Northwest Monsoon Start Dates : இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மழையை தரக்கூடியவை தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழைகள் ஆகும். கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் மாநிலங்களுக்கு தென்மேற்கு பருவமழை மூலம் நல்ல மழை கிடைக்கும். தமிழகம், ஆந்திரா மற்றும் வங்கக் கடலோர மாநிலங்கள் வடகிழக்கு பருவமழை மூலம் பயன்பெறும்.
கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியது
இந்த ஆண்டு கேரளாவில் முன் கூட்டியே அதாவது ஒரு வார காலத்திற்கு முன்பே மே 24ம் தேதி(Southwest Monsoon Date), தென்மேற்கு பருவமழை தொடங்கியது. படிப்படியாக மழை தீவிரம் அடைந்து இந்தியா முழுவதும் ஜூலை 8ம் தேதி முதல் மழை கொட்டித் தீர்த்தது.
தென் மாநிலங்களில் கொட்டித் தீர்த்த மழை
கர்நாடாகாவில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் முழுமையாக நிரம்பி, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அதன்காரணமாக இந்த முறை மேட்டூர் அணை 5 முறை முழு கொள்ளளவை எட்டியது. கேரளாவையும் பருவமழை பதம் பார்த்தது. பல பகுதிகளில் பலத்த மழை பெய்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தெலங்கானாவில் மழையின் தீவிரத்தால், மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
வட மாநிலங்களில் பெரும் பாதிப்பு
வட மாநிலங்களும் இந்த ஆண்டு பெரும் பாதிப்பை சந்தித்தன. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் மேக வெடிப்பு காரணமாக, வரலாறு காணாத வெள்ளமும், நிலச்சரிவும் உயிர்களை பலிவாங்கின. மகாராஷ்டிரம், டெல்லியும் மழை, வெள்ளத்தால் தத்தளித்தன.
15ம் தேதியுடன் விடைபெறும் பருவமழை
இந்தநிலையில், வட மாநிலங்களில் மழையின் தீவிரம் குறைந்து வருகிறது. தென் மாநிலங்களிலும் பருவமழை விடைபெறும் கட்டத்திற்கு வந்துள்ளது. அதன்படி வரும் 15ம் தேதி தென்மேற்கு பருவமழை(Southwest Monsoon End Date) விடைபெறும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
இந்தாண்டு கூடுதல் மழைப்பொழிவு
வழக்கமாக தென்மேற்கு பருவமழை மூலம் இந்தியாவுக்கு 778.6 மில்லி மீட்டர் மழை சராசரியாக கிடைக்கும். இந்த ஆண்டு 836.2 மில்லி மீட்டர் மழை(Rainfall Data) கிடைத்து இருக்கும். இது வழக்கமான அளவை விட 7 சதவீதம் கூடுதல்.
மேலும் படிக்க : IMD Rainfall: இந்தியாவில் கூடுதலாக மழைப்பொழிவு: வானிலை மையம் தகவல்
அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை
அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை(Northwest Monsson) தொடங்கும் வாய்ப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழையும் இந்த ஆண்டு வழக்கமான அளவில் இருக்கும் என்று வானிலை மையம்(IMD) கூறியுள்ளது.
===============