Impeachment motion brought against Justice Swaminathan is against democracy and Constitution, 56 former judges opposed 
இந்தியா

சுவாமிநாதன், பதவி நீக்க தீர்மானம் : முன்னாள் நீதிபதிகள் எதிர்ப்பு

GR Swaminathan Impeachment : நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பதவி நீக்க தீர்மானம், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது,முன்னாள் நீதிபதிகள் 56 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Kannan

சுவாமிநாதன் பதவி நீக்கம் - நோட்டீஸ்

Justice GR Swaminathan Impeachment : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்பிக்கள் கையெழுத்திட்ட நோட்டீஸ் மக்களை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கப்பட்டது.

முன்னாள் நீதிபதிகள் எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், ஆதர்ஷ் கோயல், ஹேமந்த் குப்தா, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் சுப்ரமணியன், சிவஞானம், சுதந்திரம் உள்ளிட்ட 56 பேர் கையெழுத்திட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்.

நீதிபதிகளை வசைபாடக் கூடாது

அதில் கூறப்பட்டுள்ளதாவது, “சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவின் சித்தாந்த மற்றும் அரசியல் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போகாத நீதிபதிகளை வசைபாடுவதற்கான வெட்கக்கேடான முயற்சி. இது போன்ற முயற்சிகள் தொடர அனுமதிக்கப்பட்டால், அது நமது ஜனநாயகத்தின் வேர்களையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் வெட்டிவிடும்.

நோட்டீசை நியாயப்படுத்த கூடாது

எம்பிக்கள் குறிப்பிடப்பட்ட காரணங்கள் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், பதவி நீக்கம் போன்ற அரிய, விதி விலக்கான மற்றும் தீவிரமான அரசியலமைப்பு நடவடிக்கையை எடுப்பதற்கு நியாயப்படுத்த அவை முற்றிலும் போதுமானவை அல்ல

எமர்ஜென்சி காலத்திலும் இப்படி இல்லை

அவசர நிலையின் போதும் கூட அப்போதைய அரசு, எல்லையை மீற மறுத்த நீதிபதிகளை தண்டிக்க பல்வேறு வழிமுறைகளை ஏற்றுக் கொண்டது என்பதை நினைவில் கொள்ளலாம். பதவி நீக்க நெறிமுறையின் நோக்கமே நீதித்துறையின் நேர்மையை நிலைநிறுத்துவதே தவிர, பழிவாங்கும் கருவியாக மாற்றுவது அல்ல.

நீதிபதிகளை கட்டாயப்படுத்தக் கூடாது

நீதிபதிகளை , தங்களது அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க வேண்டும் என கட்டாயப்படுத்தும் வழிமுறையாக பதவி நீக்கம் என்ற அச்சுறுத்தலைப் பயன்படுத்துவது அரசியலமைப்பு பாதுகாப்பையே மிரட்டும் கருவியாக மாற்றுவதாகும்.

அரசியல் அமைப்புக்கு விரோதம்

அத்தகைய அணுகுமுறை ஜனநாயகத்துக்கும் அரசியலமைப்புக்கும் விரோதமானது என்று அந்தக் கடிதத்தில் முன்னாள் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளது.

கடிதத்தில் கையெழுத்திட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் :

ஆதர்ஷ் கோயல், ஹேமந்த் குப்தா

உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் :

அனில் தியோ சிங், நரஷிம்ம ரெட்டி, பஜன்த்ரி, கமல் முகர்ஜி, பெர்மோத் காஹ்லி, விஷ்ணு எஸ் கோக்ஜே, அம்பாதாஸ் ஜோஷஷி, சுப்ரமணியன், சிவஞானம், சுதந்திரம், திங்ரா, கவுபா, கோயல், சோப்ரா, வித்யா பூஷண் குப்தா

=====