ஏடிஎம் மூலம் ரேஷன் அரிசி
ராய்ப்பூர் : சட்டிஸ்கர் மாநிலத்தில் அந்த மாநில அரசு முக்கியமான ஒரு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது ரேஷன் அரிசி வங்கி ஏடிம் போல செயல்படும் அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அன்னபூர்த்தி க்ரைன் ஏடிம் என தொடங்க பாட்டுல இந்த திட்டம் மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என அரசு தெரிவிக்கிறது. இந்த திட்டம் முதன் முதலாக அந்த மாநிலத்தில் ராய்ப்பூர் பிர்கான் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.
திட்டம் செயல்படுவது எப்படி
பயனாளிகள் தங்களது ஏடிம் யை உள்ளிட்டு தங்களது கை ரேகையை வைத்தபின் அதிலிருந்து அவர்களுக்கு ஒதுக்கிய அளவான அரிசி அவர்களுக்கு கிடைக்கும் போல அரசு அந்த இயந்திரத்தை வடிவமைத்திரிக்குறது .
அரிசியை இயந்திரத்தில் நிரப்புவதும், பயனாளிகளுக்கு விநியோகிப்பதும் தானியங்கி முறையில் நடைபெறும். இந்த கிரெயின் ஏடிஎம், உள்ளூர் பெண்கள் சுயஉதவிக் குழுவான ஜோதி குழுவால் இயக்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு உலக உணவுத் திட்டம் ஆதரவு அளித்து வருகிறது.
பொதுமக்கள் வரவேற்பு :
இந்த திட்டத்தை கூறுத்தி பொதுமக்களிடம் கேட்ட பொழுது மக்கள் இந்த திட்டமானது மிகவும் அவசியம் அது மட்டுமல்லாமல் எந்த நேரத்திலும் மக்கள் தங்களது உணவு பொருளான அரிசியை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கிறார்கள்.
==============