in Union Budget 2026 - 27, shops will be set up for women's self-help groups under the name SHE MARTs Shop and Women Hostel Google
இந்தியா

மத்திய பட்ஜெட் : பெண்களுக்கு ”SHE MART” கடைகள், மகளிர் விடுதிகள்

Union Budget 2026-27 on She Marts Shop and Women Hostel : மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு SHE MART பெயரில் கடைகள் அமைக்கப்படும் என்று, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Kannan

Union Budget 2026-27 : Sitharaman announces 'She-MARTs retail outlets, hostel facilities for women ; 2026-27ம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அறிவிப்புகளை வெளியிட்டார்.

* இந்திய செமிகண்டக்டர் மிஷன் 2.0-வை மத்திய அரசு தொடங்கும்.

* இந்தியாவுக்கென தனி ஏ.ஐ தொழில்நுட்பம், ”பாரத் விஸ்டா ஏ.ஐ உருவாக்கப்படும்

* மகளிருக்கான சுய உதவி தொழில் முனைவோர் சந்தைகள் அமைக்கப்படும்.

* ராஞ்சி மற்றும் தேஜ்பூரில் தேசிய மனநல மைங்கள் அமைக்கப்படும்.

* 16 ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 41 சதவீதமாகவே தொடரும்

* காதி நெசவை மேம்படுத்த இந்தியாவில் ஜவுளி பூங்காக்கள் தொடங்கப்படும்.

* பிரத்யேகமாக ஐந்து மருத்துவ மண்டலங்கள் உருவாக்கப்படும்

* வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்.

* கடற்கரையோர தொழில் வழித்தடம் அமைக்கப்படும்.

* நாட்டின் அனைத்து பிராந்திய துறைமுகங்களையும் இணைக்க புதிய திட்டம்.

* மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் 25 கோடி பேர் வறுமை கோட்டில் இருந்து மீட்பு

* நிதிக்குழு பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்

* ஸ்மார்ட் சிட்டியாக சிறு நகரங்கள் மாற்றியமைக்கப்படும்.

* ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 இடங்களில் தொல்லியல் ஆய்வு நடத்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

* சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், புதிய பிரத்யேக சரக்கு வழித்தடங்கள் 

* 15,000 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் AVGC கிரியேட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்படும்.

* அடுத்த 10 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையை மாற்றி அமைப்பதற்காக ‘கேலோ இந்தியா’ திட்டம்

* அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய நீர்வழித்தடங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்

============