India is leading the world in artificial intelligence: Open AI's Sam Altman  google
இந்தியா

செயற்கை தொழில்நுட்பத்தில் உலகிற்கு இந்தியா தலைமை வகிக்கும்: ஓபன் ஏஐ சாம் ஆல்ட்மேன் பாராட்டு

Sam Altman on India AI Summit : செயற்கை தொழில் நுட்பத்தில் உலகிற்கு இந்தியா தான் முன்னோடியாக தலைமை வகிக்துக்கொண்டு இருக்கிறது என ஓபன் ஏஐ நிறு​வன தலை​மைச் செயல் அதி​காரி சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்,

Rohini

ஏஐ உச்சி மாநாட்​டில் அவர் பேசி​ய​தாவது

Sam Altman on India AI Impact Summit 2026 : இந்​தி​யா​வில் மட்டும் வாரந்​தோறும் சுமார் 10 கோடி பேர் சாட் ஜிபிடி தளத்​தைப் பயன்​படுத்​துகின்​றனர்.

இதில் மூன்​றில் ஒரு பங்​குக்​கும் அதி​க​மானோர் மாணவர்​கள் என்​பது​தான் என்னும் கூடுதல் சிறப்பாக இருக்கின்றது என்றும்

ஓபன் ஏஐ நிறு​வனத்​தின் கோடிங் தளமான ‘கோடெக்​ஸ்’ பயன்​பாட்​டில் உலகிலேயே மிக வேக​மாக வளர்ந்து வரும் சந்​தை​யாக இந்​தியா திகழ்​கிறது.

கடந்த ஓராண்டில் செயற்கை நுண்​ணறி​வுத் தொழில்​நுட்​பம் அசுர வளர்ச்சியை எட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் .

பல்வேறு வகையில் பங்களிக்கும் ஏஐ தொழில்​நுட்​பம்

பள்ளி அளவிலான கணிதப் பாடங்​களுக்கே திணறிய ஏஐ தொழில்​நுட்​பம், இன்று ஆராய்ச்சி அளவி​லான சிக்கலான கணிதத் தீர்​வு​களை வழங்​கு​வதுடன், இயற்​பியல் துறை​யில் புதிய கண்​டு​பிடிப்​பு பரிமாணங்களை உரு​வாக்​கும் அளவுக்கு உயர்ந்துள்ளது வியப்பளிப்பதாகவும் கூறினார்

வேலைவாய்ப்பு மற்றும் கல்வி துறையில் மாற்றத்தை கொண்டு வரும்

தொழில்​நுட்​பம் ஒரு குறிப்​பிட்ட நிறு​வனம் அல்​லது நாட்​டின் கைகளில் முடங்​கி​விடக் கூடாது.

இது ஜனநாயகப்​படுத்​தப்பட வேண்​டும். அப்​போது​தான் சுதந்​திரம், சமத்​து​வம், மனித குல வளர்ச்சி நிலை நிறுத்தப்படும் என்றும் ஏஐ தொழில்​நுட்​பம் காரண​மாக மருத்​து​வம், கல்வி போன்ற சேவை​களின் செலவு குறை​யும்.

அதே வேளை​யில், தற்​போதைய சில வேலைவாய்ப்புகளில் மாற்​றங்​கள் ஏற்​படலாம் என்று தனது கருத்தினை தெரிவித்தார் .