India Post department achieved a milestone by generating a revenue of over ₹8,000 crore source:thamizhalai,ai generated
இந்தியா

”6 மாதங்கள், 8,000 கோடி வருவாய்" : சத்தமின்றி சாதித்த தபால்துறை : டிஜிட்டல் மயம், விரைவான டெலிவரியால் அசத்தல்..!

இந்திய தபால் துறை நடப்பு நிதி ஆண்டின் 6 மாதங்களில் 8 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி சாதித்து இருக்கிறது.

Kannan

இந்திய தபால்துறை

ஒரு காலத்தில் தபால் என்றாலே கடிதம், போஸ்ட் கார்டு, மணியார்டர் என்றுதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் இப்போது நம்முடைய இந்திய தபால்துறையின் வருமானம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

1,64,987 தபால் நிலையங்கள்

1854ம் ஆண்டு லார்டு டல்ஹவுசியால், இந்திய அஞ்சல் சேவை உருவாக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவுக்கு பிறகு, பட்டி தொட்டி எங்கும் தபால்துறை அலுவகங்கள் கொண்டு வரப்பட்டு, சுமார் 1,64,987-க்கும் மேற்பட்ட அஞ்சல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

6 மாதங்கள் ரூ.8,000 கோடி வருவாய்

இந்தநிலையில், நடப்பு நிதியாண்டில், முதல் ஆறு மாதங்களில் இந்திய தபால்துறை ரூ. 8,212.7 கோடியை வருவாயாக ஈட்டி இருக்கிறது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 24% வளர்ச்சி ஆகும்.

இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்குக் காரணமான முக்கிய காரணங்கள் :

• இ-காமர்ஸ் நிறுவனங்களுடனான வர்த்தகக் கூட்டாண்மை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் காரணமாக 71% அசுர வளர்ச்சி.

• தபால்துறையின் பிரீமியம் அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) மற்றும் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு (RPLI) பிரிவுகள் 44% வளர்ச்சி

• சர்வதேச வணிகம்: உலகளாவிய வர்த்தகம் மற்றும் சர்வதேச அஞ்சல் சேவைகள் (IR&GB) பிரிவு 38% வளர்ச்சி

முக்கிய சேவைகள்:

• கடிதங்கள் மற்றும் பார்சல்கள் விநியோகம்

• சிறிய சேமிப்புத் திட்டங்கள் (PPF, NSC, ரெக்கரிங் டெபாசிட், மூத்த குடிமக்கள் சேமிப்பு போன்றவை)

• அஞ்சல் காப்பீடு (PLI மற்றும் RPLI)

• வங்கி சேவைகள் மற்றும் சில்லறை சேவைகள்

• பாரம்பரிய கடிதப் போக்குவரத்து குறைந்தாலும், தபால்துறை தற்போது ஒரு வலுவான வணிக அமைப்பாக உருவெடுப்பு

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தபால்துறையின் வருமானம் உயர்ந்ததோடு மட்டுமல்லாமல், அதன் பல்வேறு சேவைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

================