ஏற்றுமதியில் அதிகளவில் வருவாய் ஈட்டி சாதனை
கடந்த 20 ஆண்டுகளாகவே இந்தியா வெளிநாடுகளுக்கு ஆயுதங்களை இறக்குமதி ,மட்டும் செய்து கொண்டு வந்தது. தற்போது ஏற்றுமதியிலும் தன்னிறவை அடைந்துள்ளது .
பொதுவாகவே இந்த ண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், தற்போது 2025-26ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி 38,424 கோடி ரூபாயை எட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இது, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 23,622 கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதியில் இந்தியா அசுர வளர்ச்சி
அந்த வகையில், ஒரே ஆண்டில் இந்தியா ஆயுத ஏற்றுமதியில் 62.66% என அசுர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக இங்கு தயாரிக்கப்பட்ட பல ஆயுதங்களையும் இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது
இந்திய : சொந்த தயாரிப்பில் ஏற்றுமதி
இந்தியா தான் சொந்தமாக தயாரித்த பிரம்மோஸ் ஏவுகணைகள், தேஜஸ் போர் விமானங்கள், இலகுரக ஹெலிகாப்டர்கள், பீரங்கிகள், வெடிமருந்துகள், அதிநவீன ரேடார்கள் மற்றும் உதிரிபாகங்கள் போன்றவறை 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது
ஏற்றுமதி , தனியார் நிறுவனங்களுக்கும் அனுமதி
இந்தியாவில் முன்னர் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே ஆயுத ஏற்றுமதி செய்த நிலையில், தற்போது இந்த துறையில் தனியாரும் ஏற்றுமதி செய்ய அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு
எதிர்வரும் காலங்களில் ,இந்த ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை 128-லிருந்து 145 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வரும் 2029-ஆம் ஆண்டிற்குள் தனது ஆயுத ஏற்றுமதியை 50 ஆயிரம் கோடியாக மேலும் உயர்த்த இலக்கு நிர்ணயித்து இந்திய அரசு செயல்பட்டு வருவதாக தெர்விக்கப்பட்டுள்ளது
ஒட்டுமொத்த இறக்குமதி 4% குறைவு
குறிப்பாக , உலக அளவில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயுத இறக்குமதி 4% குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
=================