India Successfully Tested Missile Launched From A Drone by DRDO 
இந்தியா

ட்ரோனில் இருந்து சீறும் ஏவுகணை : வெற்றிகரமாக பரிசோதித்த இந்தியா

Drone Missile Launch Test : ட்ரோனில் இருந்து ஏவுகணையை விண்ணில் ஏவி வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்து இருக்கிறது இந்தியா

Kannan

சாதிக்கும் DRDO :

Drone Missile Launch Test : பாதுகாப்பு படைகளின் வலிமையை இந்தியா படிப்படியாக மேம்படுத்தி, சாதித்து வருகிறது. இதற்கு இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு { DRDO } முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஏவுகணைகள், ட்ரோன்கள், இலகு ரக விமானங்கள் என இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு, ராணுவம், விமானப்படை, கடற்படையில் இணைக்கப்படுகின்றன.

ட்ரோன்கள் மூலம் தாக்குதல் :

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானில் உள்ள நிலைகளை தாக்க இந்தியா ட்ரோன்களை பயன்படுத்தியது. இதன் காரணமாக எந்த உயிர்ச்சேதமும் இன்றி துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது.

ட்ரோன் மூலம் ஏவுகணையை வீசி சோதனை :

இந்தநிலையில், ட்ரோன் மூலம் ஏவுகணையை செலுத்தும் சோதனையில் இந்தியா(India Test Drone Missile Launch) வெற்றிபெற்று உள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூலில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வெற்றி அடைந்து இருப்பதாக பாதுகாப்பத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்து இருக்கிறார். சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ள அவர், இந்த வெற்றி முக்கியமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்யத் இந்தியா தயாராக இருப்பதை நிரூபித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ULPGM-V2 என்று அழைக்கப்படும் ஏவுகணைகள் எடை குறைவானவை, திறன்மிக்கவை, துல்லியமாக தாக்குதல் நடத்தக் கூடியவை. இவைதான் இன்று சோதித்து பார்க்கப்பட்டன. முப்படைகளிலும் இவை இடம்பெறும் போது, எதிரிகளின் இலக்குகள் தகர்க்கப்படும். இந்தியாவுக்கு வெற்றி எளிதாகும்.

==================