India-US trade deal: Minister Giriraj accuses Rahul Gandhi of misguiding him! source: google
இந்தியா

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் : ராகுல் காந்தி தவறாக வழி நடத்துவதாக அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு!

Minister Giriraj Singh on India-US trade deal : மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ராகுல் காந்தி இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் தவறாக வழிநடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

S Kavitha

India-US trade deal: Minister Giriraj accuses Rahul Gandhi of misguiding him!

மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

Minister Giriraj Singh on India-US trade deal : மத்திய ஜவுளித்துறை அமைச்சரான கிரிராஜ் சிங் , அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தவறாக வழி நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தியின் தொடர் விமர்சனம்

இந்தியா-அமெரிக்கா இருதரப்புவர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி அதிபர் டிரம்பிடம் சரணடைந்து விட்டதாக ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் ராகுல் காந்தி மீது வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது

இதுதொடர்பாக டெல்லி செய்தியாளர்களிடையே பேசிய அவர், ராகுல் காந்திக்கு அமெரிக்க வரத்தக ஒப்பந்தம் பற்றி எதுவும் தெரியாது என்று பேசியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், ராகுல் காந்தி நாட்டில் அமைதியின்மையைத் தூண்டவே முயற்சிக்கிறார் என்றும், அவர் தவறாக வழிநடத்துகிறார் என்றும் கூறினார்.

ராகுல் காந்தி மீது வழக்கு தொடர வலியுறுத்தல்

ராகுல் காந்தி நாட்டில் உள்நாட்டுப்போரை விரும்புவதாகவும் அதனால் அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்றும் மத்திய ஜவுளித்துறை மந்திரி கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்

முன்னதாக, இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முறையான வரைவு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் முதலீட்டு உறுதிமொழி எதுவும் இல்லை.

எனினும் இந்த பணிகள் முழுவதுமாக நிறைவடைய ஒன்றரை மாதங்கள் வரை ஆகலாம்.

மார்ச் மாதத்தில் ஒப்பந்தம்

எனவே மார்ச் மாதத்தில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரியான பியூஸ் கோயல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.