Indian Army Completes Operation Against Pahalgam Attack Perpetrators Ai Generated
இந்தியா

Indian Army strikes : பஹல்காம் தாக்குதல் வழக்கில் முழுமையான நடவடிக்கை : கடைசி தீவிரவாதியும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

நேற்று நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு இறுதியாக இருந்த தீவிரவாதியும் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டான் ...

NARENDRAN K

கடந்த ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதல் :

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலில் தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவராக கருதப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மூத்த தளபதி முகமது ஆசிப் என்கிற ஹாஷிம் மூசா, பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார்.

யார் இந்த ஹாஷிம் மூசா?

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவராக ஹாஷிம் மூசா கருதப்பட்டார்.

அவர் முன்னாள் பாகிஸ்தான் சிறப்பு சேவை குழு (SSG) கமாண்டோவாக இருந்திருக்கலாம் என்றும் இந்திய பாதுகாப்பு அமைப்புகள் சந்தேகித்துள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் நடந்த பல்வேறு தாக்குதல்களுடன் அவரது பெயர் இணைக்கப்பட்டிருந்தது.

பஹல்காம் தாக்குதலுடன் தொடர்பு இந்த தீவிரவாதிக்கு என்ன தொடர்பு :

2025-ஆம் ஆண்டு பஹல்காமில் நடைபெற்ற கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலின் திட்டமிடல் மற்றும் செயல்பாட்டில் ஹாஷிம் மூசா முக்கிய பங்காற்றியதாக விசாரணை அமைப்புகள் கருதியிருந்தன.

இதனால் அவர் இந்திய பாதுகாப்பு அமைப்புகளின் தேடப்பட்ட பட்டியலில் முக்கிய இடம் பெற்றிருந்தார்.

பல மாதங்களாக நடந்த தேடுதல் வேட்டை :

ஹாஷிம் மூசாவை கண்டுபிடிக்க இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் போலீஸ் மற்றும் பிற பாதுகாப்புப் படைகள் பல மாதங்களாக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.

உளவுத்துறை மற்றும் இந்தியா நுண்ணறிவு பிரிவு கொடுத்த தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட "ஆபரேஷன் ஷெருவாலி" நடவடிக்கையின் இறுதிக்கட்டமாக, பட்காம் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் அவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புப் படைகளுக்கு முக்கிய வெற்றி :

ஹாஷிம் மூசாவின் மரணம், ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா வலையமைப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சகமும் இது பயங்கரவாத அமைப்பின் செயல்திறனுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

பஹல்காம் வழக்கில் புதிய அத்தியாயம் :

பஹல்காம் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய குற்றச்சாட்டுக்குரிய நபர்களில் ஒருவராக கருதப்பட்ட ஹாஷிம் மூசா கொல்லப்பட்டிருப்பது, இந்த வழக்கின் விசாரணையில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், தாக்குதலின் பின்னணியில் இருந்த முழு வலையமைப்பை கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தியா மக்கள் பாராட்டு மற்றும் மகிழ்ச்சி :

இந்த தீவிரவாதி கொல்லப்பட்டதும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்தார் .

இது மட்டுமல்லாமல் பிரதமரை தவிர்த்த்து இந்திய மக்களும் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகினறனர் .