Indian Army Major Swathi Shanthakumar Wins UN Secretary General’s Award 2025 Latest News in Tamil Google
இந்தியா

Major Swathi : பெண் அமைதி காப்பாளர் - விருது வென்ற மேஜர் சுவாதி!

Indian Army Major Swathi Shanthakumar : இந்திய ராணுவத்தின் மேஜர் சுவாதி சாந்தகுமார், ஐநா சபையின் பாலின சமத்துவத்திற்கான 'பெண் அமைதி காப்பாளர்' விருதை வென்று தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

Baala Murugan

சமமான பங்காளிகள், நீடித்த அமைதி திட்டம்

Indian Army Major Swathi Shanthakumar Wins UN Secretary General’s Award 2025 : இந்திய ராணுவத்தின் மேஜர் சுவாதி சாந்தகுமார் தென் சூடானில் ஐநாவின் அமைதிப்படைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதில் இவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக பெண் அமைதி காப்பாளர் விருதை வென்று இந்திய ராணுவத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மேஜர் சுவாதி, "Equal Partners, Lasting Peace" (சமமான பங்காளிகள், நீடித்த அமைதி) என்ற பெயரில் ஒரு முன்னோடித் திட்டத்தை முன்னெடுத்தார்.

மேஜர் சுவாதிக்கு குவிந்த பாராட்டுக்கள்

இந்தத் திட்டத்தின் மூலம், போர் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடச் செய்தார். சமூக மாற்றத்தில் பெண்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இந்தத் திட்டம் உலகிற்குப் பறைசாற்றிய நிலையில், இவரின் இந்த திட்டத்தால் பல்வேறு இடங்களில் பேசுபொருளாகிய இவருக்கு பலவித பாராட்டுக்கள் குவிந்து வந்தது.

தென் சூடானில் களப்பணி

தென் சூடானின் சவாலான சூழலில் பணியாற்றிய மேஜர் சுவாதி, அங்குள்ள உள்ளூர் பெண்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். ராணுவப் பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதுடன், சமூகத்தில் நிலவும் பாலினப் பாகுபாடுகளைக் குறைப்பதற்கான பல விழிப்புணர்வு முகாம்களையும் நடத்தினார். இவரது விடாமுயற்சியால் அந்தப் பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பில் பெண்களின் ஈடுபாடு கணிசமாக உயர்ந்தது.

இவர் பெற்ற விருது பலருக்கு உத்வேகம்

மேலும், இந்திய ராணுவ அதிகாரிகள் ஐநா அமைதிப்படை விருதுகளைப் பெறுவது இது முதல் முறையல்ல என்றாலும், ஒரு பெண் அதிகாரி பாலின உள்ளடக்கிய (Gender Inclusive) பணிக்காக இந்த விருதைப் பெறுவது மற்ற வீரர்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. மேலும், இவரின் முயற்சிக்கும்,திட்டத்தின் மூலம் கிடைத்த மாற்றத்திற்கும், இராணுவத்தினரை தாண்டி இந்திய பொதுமக்கள் பலரும் இவருக்கு தொடர் பராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.