India Census 2027 House Household Questions Announcement
கணக்கெடுப்புப் பணிகள் மற்றும் தயார்நிலை
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, கொரோனா தொற்று காரணமாகத் தாமதமான நிலையில், தற்போது நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் இப்பணிகளில் முதற்கட்டமாக வீடுகள் பட்டியலிடுதல் பணி நிறைவடைந்துள்ளது.
தொடங்கவிருக்கும் இரண்டாம் கட்ட பணிகள்
தற்போது இரண்டாம் கட்ட பணிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் 1,41,083 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 20,467 மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 1,61,550 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
குடும்பங்களிடம் சேகரிக்கப்படவுள்ள 40 வகையான தகவல்கள்
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் பகுதியாக, குடும்ப விவரப் படிவம் மூலம் ஒவ்வொரு நபர் மற்றும் குடும்பத்திடம் கேட்கப்படவுள்ள 40 கேள்விகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அடிப்படை மற்றும் தனிநபர் விவரங்கள்
நபரின் பெயர்
குடும்பத் தலைவருடனான உறவுமுறை
பாலினம்
பிறந்த தேதி மற்றும் நிறைவடைந்த வயது
தற்போதைய திருமண நிலை
திருமணமானபோது இருந்த வயது
கணவர் அல்லது மனைவியின் பெயர்
அறிவிக்கப்பட்ட தேசியம்
மதம்
பட்டியல் சாதி (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) அல்லது சாதி தொடர்பான விவரங்கள்
தந்தையின் விவரங்கள்
தாயின் விவரங்கள்
மாற்றுத்திறன் தொடர்பான விவரங்கள்
தாய்மொழி மற்றும் தெரிந்த பிற மொழிகள்
எழுத்தறிவு மற்றும் டிஜிட்டல் அறிவு நிலை
கல்வி நிலையம் செல்லும் நிலை
அதிகபட்சமாகப் பெற்ற கல்வித் தகுதி மற்றும் படிப்புத் துறை
கடந்த ஓராண்டில் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் வேலை செய்தாரா என்ற விவரம்
பொருளாதார நடவடிக்கையின் வகை
தொழில்
தொழிற்துறை, வணிகம் அல்லது சேவையின் தன்மை
பணியாளரின் வகை
பொருளீட்டு நடவடிக்கைகள் (குறுகிய காலம் வேலை செய்பவர்கள் மற்றும் வேலை செய்யாதவர்களுக்கு)
வேலை தேடுகிறாரா அல்லது வேலை செய்யத் தயாராக இருக்கிறாரா என்ற விவரம்
வேலை செய்யும் இடத்திற்கு செல்லும் பயண விவரங்கள்
பிறந்த இடம்
கடைசியாக வசித்த இடம்
இடப்பெயர்வுக்கான காரணம்
கடைசி இடப்பெயர்வுக்குப் பிறகு தற்போதைய கிராமம் அல்லது நகரத்தில் வசித்து வரும் காலம்
நிரந்தர வசிப்பிட முகவரி
தற்போது உயிருடன் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை
இதுவரை உயிருடன் பிறந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை
(முக்கியமாக அனைத்து பெண்களிடமும் ஒரே மாதிரியாக கேட்கப்படாது. சூழ்நிலை மற்றும் அறிவிக்கையின்படி, தற்போது உயிருடன் உள்ள குழந்தைகள் மற்றும் இதுவரை உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் திருமணமான, கணவரை இழந்த, விவாகரத்து பெற்ற மற்றும் கணவரைப் பிரிந்து வாழும் பெண்களிடம் கேட்கப்படும்.)
கடந்த ஓராண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை (திருமணமான பெண்களிடம் மட்டும் கேட்கப்படும்.
கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்ட இடம்
வங்கிக் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை
கைபேசி எண் (இருந்தால்)
ஆதார் எண் (இருந்தால்)
வாக்காளர் அடையாள அட்டை எண் (இருந்தால்)
இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவராக இருந்தால் கடவுச்சீட்டு எண்
ஓட்டுநர் உரிமம் உள்ளதா என்ற விவரம்
தனிநபர்களின் அடிப்படைத் தகவல்கள், கல்வி, வேலைவாய்ப்பு, இடப்பெயர்வு, குடும்பம் மற்றும் அடையாள ஆவணங்கள் தொடர்பாக இந்த 40 கேள்விகள் மூலம் விரிவான தரவுகள் சேகரிக்கப்பட உள்ளன.
==============