இந்திய அஞ்சல்துறை :
India Post Will Launch Guaranteed Mail Parcel Delivery Services : இந்திய அஞ்சல்துறை சார்பில் தபால்கள், பார்சல்கள் சேவை செயல்பட்டு வருகிறது. தனியார் நிறுவனங்கள் குறித்த காலக்கெடுவுக்குள் இவற்றை டெலிவரி செய்வதால், அஞ்சல்துறையின் சேவையை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை.
உத்தரவாத சேவை அறிமுகம்
இதை தவிர்க்கும் வகையில், 24 மணி நேர அல்லது 48 மணி நேர உத்தரவாதத்துடன் அஞ்சல்(India Post Delivery Time), பார்சல் சேவையை அறிமுகப்படுத்த இந்திய அஞ்சல்துறை முடிவு செய்திருக்கிறது.
ஜனவரி 1 முதல் அறிமுகம் :
இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ( Jyotiraditya Scindia ) “ ஜனவரி 1, 2025 முதல் 24 மணி நேரம் மற்றும் 48 மணி நேர காலக்கெடுவுடன் கூடிய உத்தரவாத அடிப்படையில் தபால்கள், பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்படும்(India Post Guaranteed Delivery New Time). அதன்படி நாடு முழுவதும், 24 மணிநேரம், 48 நேரத்தில் டெலிவரி காலக்கெடுவுடன் தபால் சேவை வழங்கப்படும்.
குறிப்பிட்ட நேரத்தில் விநியோகம்
குறிப்பிட்ட நேரத்துக்குள் உரியவரிடம் தபால்கள், பார்சல்கள் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யும் இருவகை ஸ்பீட் போஸ்ட் சேவை ஜனவரி 1ம் தேதி அறிமுகப்படுத்தப்படும்” என்றார்.
சேவைக்கு முழு உத்தரவாதம்
24 மணி நேரத்திற்குள் அஞ்சல்களை டெலிவரி செய்வதை உறுதி செய்யும் 24 மணிநேர வேக அஞ்சல் சேவை இருக்கும். அதேபோல், 48 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்வதற்கு 48 மணிநேர வேக அஞ்சல் சேவை இருக்கும். பார்சல்களை அடுத்த நாள் டெலிவரி செய்வதற்கு இதே போன்ற சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது 3 அல்லது 5 நாட்கள் ஆகும் பார்சல் சேவை, அடுத்த நாளே டெலிவரி செய்யப்படுவதை இது உறுதி செய்யும்.
மேலும் படிக்க : 50 ஆண்டுகால பதிவு தபால் சேவைக்கு ஓய்வு : இனி ’Speed Post’ மட்டுமே
லாபகரமானதாக மாறும் அஞ்சல்துறை
2029ம் ஆண்டிற்குள் இந்திய அஞ்சல் துறையை லாபகரமாக மாற்றுவதற்கான முதன்படியாக இது இருக்கும். அடுத்தடுத்து கொண்டு வரப்படும் இதுபோன்ற மாற்றங்கள், இந்திய அஞ்சல் துறையை சிறப்பான சேவை வழங்கும் அரசின் அமைப்பாக மாற்றி, பொதுமக்களை கவரும்.
----------------