Indian Railway Recruitment 2026 Notification 22,000 vacancies - Railway department makes a major announcement Indian Railway Logo
இந்தியா

RRB Jobs 2026: 22,000 காலி பணியிடங்கள் : ரயில்வே அதிரடி அறிவிப்பு!

Indian Railway Recruitment 2026 Notification : 10 ஆம் வகுப்பு தகுதிக்கு 22,000 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை இந்திய ரயில்வே, பணி விவரம் மற்றும் தகுதி குறித்து வெளியிட்டுள்ளது.

Baala Murugan

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

RRB Indian Railway Recruitment 2026 Notification : இந்தியாவின் பொதுத்துறை சேவை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வே குரூப் டி, குரூப் சி, குரூப் பி உள்ளிட்ட பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. அந்தவகையில் தற்போது குரூப் டி பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

22,000 பணியிடங்கள், 10ம் வகுப்பு பாஸ்

இதன் மூலம் 22000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் டி பணியிடங்களில் சில பதவிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 33 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த குரூப் டி பணிகளில் பல்வேறு பதவிகள் உள்ளன.

இதுகுறித்து அரசு தேர்வுக்கு பயிற்றுவிக்கும் தனியார் அகாடமிகள் இதுகுறித்த விவரங்களை வெளியிட்டுள்ளுன.

சொந்த ஊர்களில் வேலை கிடைக்க வாய்ப்பு

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் 6 கோட்டங்கள் உள்ளநிலையில், அவரவர் சொந்த ஊர்களுக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு பணி கிடைக்க வாய்ப்புள்ளது. இதில்,

1). அசிஸ்டெண்ட் ஒர்க்ஷாப் (ஐ.சி.எஃப்)

2). அசிஸ்டெண்ட் கேரேஜ் அண்ட் வேகன்

3). பாயிண்ட்ஸ்மேன்

4). அசிஸ்டெண்ட் எஸ் அண்ட் டி

5). அசிஸ்டெண்ட் ஒர்க்ஷாப்

6). அசிஸ்டெண்ட் டி.ஆர்.டி

7). அசிஸ்டெண்ட் டி.எல் அண்ட் ஏ.சி ஒர்க்ஷாப்

8). அசிஸ்டெண்ட் டி.எல் அண்ட் ஏ.சி

9). அசிஸ்டெண்ட் லோகோ ஷெட்

10). டிராக் மெயிண்டனர்

11). அசிஸ்டெண்ட் டிராக் மெசின்

காலிப்பணியிடங்கள் விவரம்

அசிஸ்டெண்ட் பி.வே நீங்கள் ஏதாவது ஒருவேளை கிடைத்தால் போதும் என்றால் டிராக் மெயிண்டனர் பணியை முதலிடத்தில் தேர்வு செய்யலாம்.

விண்ணப்ப தேதி மற்றும் பணி விவரம்

குரூப் டி பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு 21.01.2026 முதல் தொடங்கி 20.02.2026 அன்று முடியும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் எந்த ரயில்வே மண்டலத்திற்கும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கணினி வழியில் தேர்வு

ஆனால் ஒருவர் ஒரு மண்டலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி வழித் தேர்வில் கணிதம், திறனறி, பொது அறிவு கேள்விகள் இடம்பெறும்.

100 மதிப்பெண்களுக்கு 85க்கு மேல் டார்கெட் வைத்து படித்தால் எளிதாக வேலை பெறலாம். கணினி வழித் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு 100 வினாக்களுடன் நடைபெறும். இதற்கான கால அளவு ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும்.

உடல்தகுதி தேர்வு

கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட மண்டல இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.