Indian Railways is set to soon achieve the goal of 100 percent electrification of broad gauge  google
இந்தியா

100% மின்மயமாக்கல், சாதிக்கும் இந்திய ரயில்வே : 99.6% பணிகள் நிறைவு, 269 கி.மீ. நிலுவை..! : சுற்றுச்சூழல் பாதுகாப்பு

அகல ரயில் பாதையில் 100 சதவீதம் மின்மயமாக்கல் என்ற இலக்கை விரைவில் எட்டி சாதிக்க இருக்கிறது இந்திய ரயில்வே.

Kannan

இந்தியாவில் ரயில்கள் இயக்கம்

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மீட்டர்கேஜ் பாதையில் நிலக்கரியால் இயங்கும் ரயில்கள் இயக்கப்பட்டன.

மின்சார ரயில்கள்

இந்தியா​வில் ரயில் ​பாதை மின்​மய​மாக்​கல் 1925ல் தொடங்​கியது. நாட்​டின் முதல் மின்​சார ரயில் 1,500 வோல்ட் டிசி அமைப்​பில், மகா​ராஷ்டி​ரா​வின் மும்பை விக்​டோரியா டெர்மினஸ் மற்​றும் குர்லா ஹார்​பர் இடையே இயக்​கப்​பட்​டது.

இந்தியாவில் இருப்பு பாதைகள்

அதன்பிறகு படிப்படியாக மீட்டர்கேஜ் பாதைகள், பிராட்கேஜ் பாதைகளாக அதாவது அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டு, பயணிகள் ரயில்கள் தொடங்கி, வந்தே பாரத் ரயில்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. விரைவில் புல்லட் ரயிலும் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

பிராட்கேஜ் மின்மயமாக்கல்

அகல ரயில் பாதையை பொருத்தவரை, மொத்​த​முள்ள 70,271 கி.மீ. அகல ரயில் பாதை​யில் 2026 மே 31ம் தேதி நில​வரப்​படி 70,002 கி.மீ. மின்​மய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்படி, அகல ரயில் பாதை​யில் 99.6% ஏற்​கெனவே மின்​மய​மாக்​கப்​பட்டு விட்​ட​தாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்​ளது.

100% மின்மயமாக்கல்

25 மாநிலங்கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​கள் தங்​கள் அகல ரயில்பாதை​யில் 100% மின்​மய​மாக்​கலை எட்​டி​யுள்​ளன.

ராஜஸ்தான், தமிழ்​நாடு, அசாம், கர்​நாட​கா, கோவா ஆகிய 5 மாநிலங்​களில் இன்னும் 269 கி.மீ. வழித்​தடம் மட்​டுமே மின்மயமாக்​கல் பணி​யின் கீழ் உள்ளன.

புதிய பாதைகள் மற்​றும் வழித்தட திட்டங்​கள் அனைத்​தும் தற்போது மின்​மய​மாக்​கலுடன் சேர்த்தே அனு​மதி அளிக்​கப்​பட்​டு, கட்​டமைக்​கப்​பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, விரைவில் 100 சதவீதம் மின்மயமாக்கல் என்ற சாதனையை எட்ட இருக்கிறது இந்திய ரயில்வே.

=================================