Indian Railways Makes OTP Verification Mandatory For Tatkal Ticket Booking Online Effective Date Today Date Check IRCTC New Rules 2025 Tamil Google
இந்தியா

ரயில்வேயில் புதிய OTP திட்டம் : தட்கல் பயணிகள் தெரிஞ்சுக்கோங்க!

OTP Mandatory For Tatkal Ticket Booking Online : இந்திய ரயில்வே, இன்று முதல் தட்கல் டிக்கெட் பதிவுக்கு OTP முறையை அறிமுகப்படுத்துகிறது. இது உண்மையான பயணிகளுக்கு வாய்ப்பளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Baala Murugan

ரயில்வேதுறை அப்டேட்

OTP Mandatory For Tatkal Ticket Booking Online : இந்திய ரயில்வே தொடர்ந்து ரயில் பயணிகளை குஷிப்படுத்தும் விதமாக பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது. அதன்படி, சில நாட்களுக்க முன்பு 50 ரூபாய் பணத்துடன் சாதரண பெட்டிகளுக்கும் தலையணை, போர்வை வழங்கவுள்ளதாக அறிவித்து, முதலவதாக 10 ரயில்களுக்கு வழங்கியும் இந்த திட்டத்தை தொடங்கினர்.

இந்நிலையில், ரயில் அவசர பயணிகளுக்கென அதாவது, தட்கல் முறையில் ஓடிபியை அறிமுகப்படுத்தி, தவறான எண்கள் உள்நுழையாதவாறு அறிவித்துள்ளனர்.

இந்திய ரயில்வேயின் புதிய அறிவிப்பு

இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு இந்திய ரயில்வே, தட்கல் டிக்கெட் பதிவு முறையில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. டிசம்பர் 1 முதல், தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் போது பயனர் வழங்கிய மொபைல் எண்ணுக்கு OTP வரும்.

அதை உள்ளிட்ட பிறகே டிக்கெட் பதிவு செயல்முறை நிறைவடையும். தற்போது வெஸ்டர்ன் ரயில்வேயில் சில ரயில்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும்.

இனி ஓடிபி இருந்தால் தட்கல் டிக்கெட்

Google தட்கல் டிக்கெட் OTP விதி ரயில்வே தகவல்படி, மும்பை சென்ட்ரல்–அகமதாபாத் ஷதாப்தி எக்ஸ்பிரஸில் டிசம்பர் 1 முதல் இந்த OTP அடிப்படையிலான தட்கல் டிக்கெட் முறை தொடங்குகிறது.

உண்மையில் அவசரமாக பயணம் செய்ய விரும்பும் பயணிகளுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் நிலையை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலி மொபைல் எண்கள் எடுத்துக்காது

தட்கல் டிக்கெட் பதிவு செய்யும்போது மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்ட பிறகே டிக்கெட் உறுதிப்படுத்தப்படும். தவறான அல்லது போலி மொபைல் எண்கள் மூலம் பதிவு செய்வது இனி சாத்தியமில்லை.

செயலில் உள்ள, சரிபார்க்கப்பட்ட மொபைல் எண்ணுடையவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டை பதிவு செய்ய முடியும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.