Drastic Staff Reduction in Indian Railways: Order Issued to Eliminate Over 29,600 Posts source:google
இந்தியா

இந்திய ரயில்வேயில் அதிரடி ஆட்குறைப்பு : 29,600க்கும் மேற்பட்ட பணியிடங்களை நீக்க உத்தரவு : கேள்விக்குறியாகும் பாதுகாப்பு?

Indian Railways Staff Reduction: இந்திய ரயில்வேயில் 29,608 பணியிடங்கள் குறைப்பு! தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,906 பேருக்கு பாதிப்பு.

S Kavitha

Drastic Staff Reduction in Indian Railways: Order Issued to Eliminate Over 29,600 Posts-Is Railway Safety at Risk?

மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவு

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயில், பெரும் எண்ணிக்கையிலான பணியிடங்களைக் குறைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் ஊழியர்கள் அதிர்ச்சி

இந்த நடவடிக்கை ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு சதவீதம் ஆட்குறைப்பு

இந்திய ரயில்வேயில் தற்போது மொத்தம் 14,80,455 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

29,608 பணியாளர்களை உடனடியாகக் குறைக்க உத்தரவு

நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில், இதில் இரண்டு சதவீதம், அதாவது 29,608 பணியாளர்களை உடனடியாகக் குறைக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் பாதிப்பு எவ்வளவு?

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தைப் பிரதானமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில்மட்டும், 2026 ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி 1,906 பணியிடங்கள் குறைக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு குறித்த அச்சம்

ஒருபுறம் வந்தே பாரத் போன்ற புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படுவதும், புதிய வழித்தடங்கள் உருவாக்கப்படுவதும் அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் பணியாளர்களைக் குறைப்பது ஆபத்தானது என ஊழியர் சங்கங்கள் எச்சரிக்கின்றன.

பராமரிப்புப் பணிகள்- விபத்து ஏற்பட வாய்ப்பு?

சிக்னலிங் மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகளில் ஆட்கள் குறையும் போது விபத்துகளுக்கான வாய்ப்பு அதிகரிக்கலாம்.

வேலைபளு அதிகரிக்ககூடும்?

ஏற்கனவே இருக்கும் ஊழியர்களுக்குப் பணிப்பளு அதிகரித்து, அது அவர்களின் செயல்திறனைப் பாதிக்கக்கூடும்.

ஓய்வுபெற்ற அதிகாரிகள் கவலை

இது குறித்து ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் கூறுகையில், "ரயில்வே என்பது பொதுமக்களின் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒரு துறை.

மனித ஆற்றல் மிகவும் அவசியம்

தொழில்நுட்ப வசதிகள் பெருகினாலும், நேரடிப் கண்காணிப்பு மற்றும் பராமரிப்புக்கு மனித ஆற்றல் மிகவும் அவசியம்.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை ரயில்வே பாதுகாப்பில் சமரசத்தைச் செய்யும் சூழலை உருவாக்கும்," எனக் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆட்குறைப்பால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் தாக்கம்

நிர்வாக ரீதியான இந்த மாற்றம், எதிர்காலத்தில் ரயில் சேவைகளிலும், பயணிகளின் பாதுகாப்பிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

=====