India's Aviation Regulator Orders One-Time Drug Test for All Pilots to Strengthen Flight Safety Standards Ai Generated
இந்தியா

DGCA Update : அதிரடி உத்தரவு : அனைத்து விமானிகளுக்கும் ”போதைப்பொருள் பரிசோதனை கட்டாயம்”...!

ஏர் இந்தியா சம்பவத்துக்கு பின் அதிரடி நடவடிக்கை; 14,000க்கும் மேற்பட்ட விமானிகளுக்கு கட்டாய போதைப்பொருள் பரிசோதனை...

NARENDRAN K

ஏன் இந்த உத்தரவு?

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும் தங்களது விமானிகளுக்கு ஒருமுறை கட்டாய போதைப்பொருள் (Drug Test) பரிசோதனை நடத்த வேண்டும் என்று விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான டிஜிசிஏ (DGCA) உத்தரவிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, ஏர் இந்தியாவின் புக்கெட்–டெல்லி விமானத்தில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

14,000க்கும் மேற்பட்ட விமானிகள் சோதனை :

இந்தியாவின் பல்வேறு விமான நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 14,000 விமானிகள் இந்த சிறப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

இந்த சோதனைகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், 2027 ஜூலைக்குள் அனைத்தையும் முடிக்க டிஜிசிஏ காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

புக்கெட்–டெல்லி விமான சம்பவம் என்ன?

ஆகஸ்ட் 4ஆம் தேதி புக்கெட்டில் இருந்து டெல்லி நோக்கி சென்ற ஏர் இந்தியா ஏ320 விமானம் 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறை சந்தித்தது.

இதனால் விமானம் சுமார் 300 அடி உயரத்தை இழந்ததாகவும், 24 பேர் காயமடைந்ததாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அந்த விமானத்தின் கேப்டனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மனநிலையை பாதிக்கும் பொருளுக்கான (psychoactive substance) தடயம் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது.

தற்போதைய விதி என்ன?

தற்போது டிஜிசிஏ விதிகளின்படி, ஆண்டுதோறும் விமானிகள் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களில் (ATC) 10 சதவீதம் பேருக்கு மட்டுமே சீரற்ற (Random) போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்படுகிறது.

ஆனால் புதிய திட்டத்தின் கீழ் அனைத்து விமானிகளையும் ஒருமுறை சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

விதிமீறினால் என்ன நடவடிக்கை?

பரிசோதனையில் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டால் முதலில் பறக்கும் பணியில் இருந்து நீக்கப்படுவார்.

முதல் முறை சிக்கினால் மறுவாழ்வு (Rehabilitation) திட்டத்திற்கு அனுப்பப்படுவார்.

இரண்டாவது முறை சிக்கினால் விமானி உரிமம் 3 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படும். முறை சிக்கினால் உரிமம் ரத்து செய்யப்படும்.

=================