India's contribution to the world and the UN is very important - Antonio Guterres expressed his pride google
இந்தியா

ஐநா.வுக்கான இந்தியாவின் பங்களிப்புக்கு நன்றி : பெருமிதத்துடன் ஐநா பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ்

India AI Impact Summit 2026 : உலகுக்கும் ஐ.நா.வுக்குமான இந்தியாவின் நிரந்தர பங்களிப்பு மிக மிக முக்கியமானது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Rohini

அந்தோணியோ குத்தேரஸ் கூறியதாவது

India AI Impact Summit 2026 : இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்தோணியோ குத்தேரஸ், ‘‘ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி, பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி என அனைத்து தலைப்புகள் தொடர்பான விவாதங்களிலும் மிக முக்கியமான மைல்கல்லாக இந்தியா மாறியிருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்

இந்தியா ஜனநாயக நாடு

ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகித்தபோது எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் எனக்கு இன்னமும் எனக்கு நினைவில் உள்ளன என்றும் உலகின் பல நாடுகளும் ஜனநாயகமான சிக்கலில் உள்ள நிலையில், அதில் இந்தியா மட்டும் ஜனநாயக நாடாகவும் மனித உரிமைகளைக் கொண்டுள்ள நாடாகவும் திகழ்கிறது என்று குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்தார் .

ஐ.நா.வுக்கான இந்தியாவின் பங்களிப்பு

ஐ.நா.வுக்கான இந்தியாவின் பங்களிப்பிற்காக இந்தியாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக, ஐ.நா. அமைதிப் படையில் இந்தியா இருப்பதற்காக நாங்கள் மிகப் பெரிய நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

ஐநா அமைதிப்படையில் இந்திய வீரர்கள்

தற்போது உலகின் பல பகுதிகளில் அமைதிப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஐ.நா. அமைதிப் படையில் 5,000 இந்திய ஆண்களும் பெண்களும் இருக்கின்றனர் என்று இந்தியாவிற்கு தனது நன்றியினை தெரிவிப்பதாகவும் கூறினார் .

பாலின சமத்துவதிலும் இந்தியாவின் பங்கு அளப்பரியது

பாலின சமத்துவம் என்பதே ஐ.நா.வின் அடிப்படை நோக்கம். அந்த நோக்கத்துக்கு இணங்க, இந்தியா முற்றிலும் பெண் காவலர்கள் அடங்கிய அமைதிப் படையையை வழங்கியிருக்கிறது .

ஐ.நா. வரலாற்றில் மைல்கல்

கடந்த 2007-ல் இந்த படை லைபீரியாவில் தனது பணிகளைச் சிறப்பாக செய்தது. இவ்வாறு முழு அளவில் பெண்கள் படையை அனுப்பிய முதல் நாடு இந்தியா. இது ஐ.நா. வரலாற்றில் ஒரு மைல்கல் என்றும் இந்தடியாவின் பங்களிப்பபை பெருமிதத்துடன் பாராட்டினார் .

பொருளாதார பங்களிப்பு

வளர்ந்த ஜி7 நாடுகளும் அதைப் போன்ற சில நாடுகளும், பொருளாதாரத்தில் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், அப்படிப்பட்ட வளர்ந்து வரும் நாடுகளுக்கு அடிப்படைத் தூணாக இந்தியா, ஒவ்வொரு நாளும் உலக பொருளாதாரத்தில் தனது பங்களிப்பை உயர்த்திக் கொண்டே இருக்கிறது என இந்தியாவின் பொருளாதார சிறப்பினை குறித்து குறிப்பிட்டு பேசினார்

இது ஒரு மெகா போக்கு என்றும் காலப்போக்கில் நீதி, சமத்துவம், அமைதி ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க இது உதவும் என்றும் குறிப்பிட்டார் .