India's first hydrogen train has achieved a significant milestone by traveling 6,000 kilometers AI generated
இந்தியா

6,000 கி.மீ. நிறைவு செய்த ஹைட்ரஜன் ரயில்! : 36,444 கிலோ CO2 உமிழ்வு குறைப்பு : 2030க்குள் பூஜ்யமாக கொண்டுவர இலக்கு..!

இந்தியாவில் அறி​முகம் செய்​யப்​பட்ட நாட்​டின் முதல் ஹைட்ரஜன் ரயில் 6 ஆயிரம் கிலோமீட்​டர் பயணித்​து, 36,444 கிலோ கார்பன் டை ஆக்சைடு உமிழ்​வைக் குறைத்​து சாதித்து இருக்கிறது.

Kannan

இந்தியாவில் ஹைட்​ரஜன் ரயில்

இந்தியாவின் முதல் ஹைட்​ரஜன் ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி கடந்த மாதம் கொடியசைத்​துத் தொடங்கி வைத்​தார். 10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் 2,600 பேர் பயணிக்க முடி​யும்.

சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரயில்

ஹரியா​னா​வின் ஜிந்த் மற்​றும் சோனிபட் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இது தற்​போது செயல்​பாட்​டில் உள்ள மிக நீள​மான ஹைட்​ரஜன் ரயில் ஆகும்.

3,200 ஹெச்பி உந்​து​விசை அமைப்​புடன், உலகில் உள்ள மிக சக்​தி​ வாய்ந்த ஹைட்​ரஜன் ரயில்​களில் இது​வும் ஒன்றாகும்.

தூய்மையான எரிபொருள்

மிகத் தூய்​மை​யான எரிபொருளாகக் கருதப்​படு​வ​தால் ஹைட்ரஜன் பயன்​படுத்​தப்​படு​கிறது. ஹைட்​ரஜனில் இயங்​கும் ரயில்​கள் சத்​தமின்றி இயங்​கு​கின்​றன.

6,000 கி.மீ. பயணம்

பூஜ்ஜிய உமிழ்வை உரு​வாக்​கு​கின்றன மற்​றும் டீசலை சார்ந்​திருக்​கும் நிலை​யைக் குறைக்க முடி​யும். இந்த ரயில் ஒவ்​வொரு நாளும் புதிய மைல்கற்களை எட்டி வரு​கிறது. இது​வரை சுமார் 6,000 கிலோமீட்டர் தூரப் பயணத்தை நிறைவு செய்​துள்​ளது.

2030க்​குள் நிகர-பூஜ்ஜிய கார்​பன் டை ஆக்​சைடு உமிழ்வை அடைய வேண்​டும் என்று இந்​தியா இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது. இதன் ஒரு பகு​தி​யாகத்​தான் ஹைட்​ரஜன் ரயில் அறி​முகம் செய்யப்​பட்​டுள்​ளது. இந்த ரயில் துணைப் பொருளாக நீரா​வியை மட்​டுமே வெளி​யிடு​கிறது.

தூய்மையான எரிபொருள் ரயில்

இதனால் தூய்​மை​யான எரிபொருள் தொழில்​நுட்ப ரயி​லாக இது விளங்​கு​கிறது. வழக்​க​மான டீசல்​-எலக்ட்​ரிக் வாக​னம் (DEMU) பயணிக்​கும் ஒவ்​வொரு கிலோமீட்​டருக்​கும் தோராய​மாக 6.074 கிலோ கார்​பன் டை ஆக்​சைடு (CO2) உமிழ்வை உரு​வாக்​கு​கிறது.

கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு குறைப்பு

இந்​நிலை​யில், ஹைட்​ரஜனில் இயங்​கும் ரயில் இது​வரை சுமார் 36,444 கிலோ CO2 உமிழ்​வைக் குறைக்​க வழி​வகுத்​துள்​ளது குறிப்பிடத்​தக்​கது.

===============