India's First Hydrogen Train: To run between Jind and Sonipat; Modi to inaugurate; google
இந்தியா

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ஜிந்த்-சோனிபட் இடையே இயக்கம் : தொடங்கி வைக்கும் மோடி, சிறப்பம்சங்கள், விவரம்...

ஹைட்ரஜன் சக்தியால் இயங்கும் முதல் பயணிகள் ரயில் விரைவில் இந்தியாவில் சோதனை ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார்

Rohini

முதல் ஹைட்ரஜன் ரயில் ,துவங்கி வைக்கும் மோடி

ஹைட்ரஜன் சக்தியால் இயங்கும் முதல் பயணிகள் ரயில் விரைவில் இந்தியாவில் சோதனை ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்

சுற்றுசூழல் மாசுப்பாட்டை தடுக்க மாற்றுவழி

பொதுவாக இந்திய ரயில்வேயில் ரயில்கள் டீசல் மற்றும் மின்சாரம் மூலம்தான் இயக்கப்பட்டு வருகிறது . டீசல் ரயில்கள் மூலம் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் நோக்கில் ஹைட்ரஜன் ரயில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

எவ்வாறு இயங்கும்

ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் மூலம் மின் உற்பத்தி செய்து, அதன்மூலம் ரயில் இன்ஜின் இயக்கம் நடைப்பெற்று ரயில் இயங்குகிறது

ஜிந்த் - சோனிபட் இடையே முதல் இயக்கம்

இந்த ஹைட்ரஜன் ரயில் தொடக்கத்தை ஜூலை மாதம் 17-ம் தேதி இந்தியாவிலேயே ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயில் ஹரியானாவின் ஜிந்த் - சோனிபட் இடையே சோதனை ஓட்டமாக இயக்கப்படுகிறது. இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.

திட்டம் எப்போது முன்மொழியப்பட்டது

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் திட்டம் கடந்த 2020-21-ம் ஆண்டில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் வடக்கு மண்டல ரயில்வே இந்தத் திட்டத்தை 2022 ஏப்ரலில் தொடங்கியது.

இந்தத் திட்டத்துக்கான டெண்டர் ஹைதராபாத்தைச் சேர்ந்த மேதா என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது, இந்த நிறுவனம்தான் எரிபொருட்களை சப்ளை செய்கிறது. இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் முடிந்தபின், கடந்த மே 22-ம் தேதி பயணிகளை இயக்க அனுமதியளித்தியிருந்த்து குறிப்பிடத்தக்கது

ஹைட்ரஜன் ரயில் எவ்வாறு இயக்கப்படுகிறது

பொதுவாக இந்த ஹைட்ரஜன் ரயிலானது ரயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக கலன்களில் அதிக அழுத்தத்தில் ஹைட்ரஜன் எரிபொருள் வைக்கப்பட்டிருக்கும், அதைப் பயன்படுத்தி இயக்கப்படும்.

இந்த ரயிலில் உள்ள பிரத்யேக கலன்களில் அதிக அழுத்தத்தில் 460 கிலோ ஹைட்ரஜன் நிரப்பப்படும். தினசரி 2 டிரிப்புகளுக்கு 300 கிலோ வரை செலவாகும்; 365 கிலோ மீட்டர் வரை செல்ல முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முறைகள் எவ்வாறு கையாளப்படுகிறது

இந்த ஹைட்ரஜன் ரயிலை இயக்குவதற்காக பயிற்சி பெற்ற ஊழியர்கள் இதை கவனிப்பர், சோதனை ஓட்டத்தின்போது, தொழில்நுட்ப ஊழியர்களும் உடன் செல்வார்கள்.

இது எதிர்பாரத ஆபத்தை விளைவிக்கும் என்பதால் , வழிகாட்டு நெறிமுறைகளுடன் பாதுக்காப்பாக இயக்கம் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பும் அனுமதியளித்துள்ளது

வரலாற்று பின்னணி

முதன்முதலாக உலகின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரயில் 2018-ல் ஜெர்மனியில் இயக்கப்பட்டது. அதன்பின்னர் ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா தங்கள் நாட்டுகளில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரயிலை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது

எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது , கூலிங் பிளான்ட் அமைப்பு பாதுகாப்பு அவசியம்

இதை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதும் கடினமான ஒன்றாகும் , மேலும் ஹைட்ரஜனை சேமிக்கும்போது மைனஸ் 15 டிகிரி அளவில் வைத்திருக்க வேண்டும் என்பதால் இதற்காக கூலிங் பிளான்ட் அமைக்கப்பட வேண்டும்.

குளிர்ந்த நிலையில் இருந்தால் ஹைட்ரஜன் திரவ நிலைக்கு வரும். அப்போதுதான் எளிதாக கொண்டு செல்ல இயலும். எளிதாக தீப்பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது என்பதால் அதிக பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவது அவசியம்.

இந்தியாவின் முதல் மற்றும் நீண்ட ரயில்

இந்தியாவில் முதன் முதலாக இயக்கப்படும் இந்த ரயிலானது நீண்ர ரயிலாகவும் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், சோதனை ஓட்டமாக இயக்கப்படும் இந்த ரயலில் பயணிகளுக்கான 8 பெட்டிகள், 2 பைலட் பெட்டிகள் இணைக்கப்படும்.

==================