இந்தியாவின் முதல் இசை ரோடு
India's First Musical Road : சாலையில் பயணிக்கும்போது நீங்கள் இசையை உணர்தல் எப்படி இருக்கும் ,அது உண்மையாகவே தற்போது செயல்படுத்தபட்டுள்ளது .மும்பையில் சத்ரபதி சம்பாஜி மகாராஜ் கடலோர சாலையின் அருகே தான் இந்த இசை சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே ஆச்சிரியமும் ,விவாதமும்
இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த இசை சாலை குறித்து மக்களிடையேயே பெரும் ஆச்சிரியமும் ,விவாதமும் ஏற்பட்டுள்ளது .வாகனங்களின் வேகத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவே இந்த புதிய முயற்சியை மும்பை அரசு முன்னெடுத்திருப்பதாக கூறியுள்ளது.
இசையால் ஒலிக்கும் சாலை
மும்பையின் நரிமன் பாயிண்டில் இருந்து வொர்லி செல்லும் கடலோர சாலையில் 500 மீட்டர் பகுதி, வண்டி ஓட்டும்போது புகழ்பெற்ற 'ஜெய் ஹோ' பாடல் இசை கேட்கும் வகையில் இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது.
சாலையில் இந்த ஒலி எங்கிருந்து வருகிறது
சாலையில் தார்க்குள் குறிப்பிட்ட தூரம் மற்றும் ஆழத்தில் ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ் (பள்ளங்கள்) உருவாக்கப்பட்டுள்ளது . ஒரு வாகனம் மணிக்கு 60 முதல் 80 கி.மீ வேகத்தில் இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள சாலையின் மீது செல்லும்போது, டயர் மற்றும் சாலையின் உராய்வினால் அதிர்வு ஏற்படுகிறது. இந்த அதிர்வுகளே சேர்ந்து ஒலி அலையை உருவாக்கி, புகழ்பெற்ற ஆஸ்கர் விருது பெற்ற 'ஜெய் ஹோ' பாடலின் இசையாக மாறுகிறது.
இந்தியாவில் இதுபோன்ற சாலைகள் வேறு எங்கு எல்லாம் உள்ளது
இந்தியாவின் முதல் மற்றும் உலகின் ஐந்தாவது இசை சாலை இந்த மும்பை இசை சாலையாகும் . இதற்கு முன்பு இதுபோன்ற சாலை ஹங்கேரி, ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது ,தற்போது மும்பை இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.