ET NOW-இன் உலகளாவிய வணிக உச்சி மாநாடு (GBS)
வணிக உச்சி மாநாடு (GBS) நிகழ்வின் 2ம் நாளில் கலந்துகொண்டு பேசிய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராத்தியா சிந்தியா பங்கேற்று கருத்தரங்கில் உரையாற்றினார்.
தொலைதொடர்பு சேவை - மாற்றங்கள்
அப்போது அவர் இந்தியாவின் தொலைத்தொடர்பு துறை கடந்த 10 ஆண்டுகளில் கண்ட வியத்தகு மாற்றங்களை கண்டு இருப்பதாக பட்டியலிட்டு பேசினார்.
டிஜிட்டல் ஹைவே: பொருளாதார மேம்பாடு
இந்தியா ஒரு கண்ணுக்குத் தெரியாத "டிஜிட்டல் ஹைவேயை" உருவாக்கியது, இது இப்போது வணிகம், வர்த்தகம் மற்றும் பரந்த பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஒரு உள்கட்டமைப்பாக விரிவடைந்து நிற்கிறது.
ஜிபி டேட்டா விலை ரூ.9 தான்
ஜிபி டேட்டாவின் விலை சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.287 ஆக இருந்தது, இப்போது ரூ.9 ஆகக் குறைந்துள்ளது, இதனால் இந்தியாவின் டேட்டா விலைகள் உலக சராசரியில் தோராயமாக 5 சதவீதமாக உள்ளது.
சராசரி உலகளாவிய விலை ஒரு ஜிபிக்கு சுமார் 2.49 அமெரிக்க டாலர்கள் என்றால், இந்தியாவின் விலை சுமார் 11 காசுகளாக இருக்கிறது என் அவர் குறிப்பிட்டார் .
உலகளாவிய வர்த்தகத்தையும் வடிவமைத்து வருகிறது இந்தியா
ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (UPI) மாதத்திற்கு கிட்டத்தட்ட 20 பில்லியன் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது,
இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 250 பில்லியன் பரிவரத்தனை என 4.3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இது மாறுகிறது .
இந்தியா, தனது சொந்த பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், 190 நாடுகளில் டிஜிட்டல் இணைப்புடன், உலகளாவிய வர்த்தகத்தையும் இது மேம்படுத்துகிறது
4G ஸ்டேக்கை உருவாக்கும் ஐந்தாவது நாடு இந்தியா
இந்தியா டெலிக்காம் துறையிலும் 4ஜி தொழில்நுட்பம், 5ஜி தொழில்நுட்பங்களை தாண்டி தற்போது 6ஜியில் தண்ணி நிலைநாட்டி முன்னேறி வந்து கொண்டு இருக்கிறது.
நோக்கியா, எரிக்சன், ஹவாய், ZTE மற்றும் சாம்சங் போன்ற உலகளாவிய உபகரண உற்பத்தியாளர்களை மட்டுமே நம்பியிருக்காமல், உள்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனத்தை உருவாக்குவதற்கான எடுத்த முடிவே ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்து இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்திய வேகமான நாடு இந்தியா
இந்தியா உலகளவில் மிக வேகமாக 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வரும் முக்கியமான நாடாகும், 22 மாதங்களில் சுமார் 500,000 டவர்களை நிறுவியதாகவும், இதற்காக உள்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களால் ரூ.4.5 லட்சம் கோடி மூலதனச் செலவு செய்யப்பட்டதாகவும் சிந்தியா கூறினார்
எதிர்கால 6ஜி டெக்னாலஜி
3GPP மற்றும் ITU போன்ற தளங்களில் 6G-க்கான உலகளாவிய தரநிலை நிர்ணயத்தில் முதல் முறையாக இந்தியா பங்கேற்க உள்ளது என்றும்
அரசாங்கத்தில் 18 பங்குதாரர்களில் இருந்து 100 பங்குதாரர்களாக வளர்ந்துள்ள நிலையில், 6G தரநிலைகள் இறுதி செய்யப்படும்போது உலகளாவிய காப்புரிமைகளில் 10 சதவீதத்தைப் பெறுவதே இதன் குறிக்கோள் அமைய போகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் .