இரட்டை எஞ்சின் அரசு
Foreign Investments in South India : பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜகவின் தொலைநோக்கு பார்வை மற்றும் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் மூலம் விரைவான கொள்கை அமலாக்கத்தால் ஆந்திரா அபார வளர்ச்சி அடைந்து வருகிறது.
முதலீடுகள் - அசத்தும் ஆந்திரா
கடந்த ஆண்டு ஜூன் முதல், ஆந்திராவில் தெலுங்கு தேச அரசு, பதவியேற்ற நாளில் இருந்தே, முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு நிர்வாக மாதிரியைச் செயல்படுத்தி வருகிறது. இதனால், தென்னிந்தியாவின் முதலீட்டுச் சூழலில் ஒரு விரைவான மாற்றம் ஏற்பட்டது. தொழில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME), மின்னணுவியல், தரவு மையங்கள், உணவு பதப்படுத்துதல், ஜவுளி, கடல்சார் துறை என பரந்த அளவிலான கொள்கைக் கட்டமைப்பு விரைவாக உருவாக்கப்பட்டது.
அசுர பாய்ச்சலில் ஆந்திரா
இவை வெறும் காகிதங்களில் இல்லாமல், உடனடியாக செயல்படுத்த கூடிய, முதலீட்டாளர்களுக்கு உகந்த விதமாக கொண்டு வரப்பட்டன. பெரிய அளவில் மூலதன மானியங்கள், முத்திரைத் தீர்வை தள்ளுபடிகள், மின்சாரச் செலவுக் குறைப்புகள், தொழில்துறை நிலங்கள் என, தடைகளை தகர்த்து, ஆந்திரா அசுர பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. இந்தச்சூழல், உலகளாவிய முதலீட்டாளர்களுக்ளை சரியாக ஈர்த்து வருகின்றன.
குவியும் வெளிநாட்டு நிறுவனங்கள்
2024-25ல் ₹4.47 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. கூகுளின் 15 பில்லியன் டாலர் AI தரவு மையம், டிஜிட்டல் கனெக்ஷனின் 11 பில்லியன் டாலர் மதிப்பிலான 1 GW தரவு மையம், ரைடன் இன்ஃபோடெக்கின் ₹87,520 கோடி மதிப்பிலான AI-இயக்கப்பட்ட தரவு மையம், எல்&டியின் பெரிய தரவு மையம், குகுளுடன் இணைந்து அதானி குழுமம் அமைக்கும் தரவு மையம் என ஆந்திராவின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கிறது.
தமிழகத்தை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்
அதேசமயம், திமுக ஆளும் தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறும் சூழல் தான் அதிகரித்து இருக்கிறது. இது அரசின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. உதாரணமாக பெகாட்ரான் மின்னணு நிறுவனம் முந்தைய விரிவாக்கத் திட்டத்தைக் குறைத்துக் கொண்டது.
நீண்டகால கொள்கை தாமதங்களால், பல பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்சார வாகன உற்பத்தித் திட்டம் வேறு மாநிலத்திற்கு வெளியேறியது. விரைவான அனுமதி ஆந்திரா, மகாராஷ்டிராவில் கிடைப்பதால், உலகளாவிய நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்த மாநிலத்தை நோக்கி திருப்பி விடுகின்றன.
தடுமாறும் கர்நாடகா
அண்டை மாநிலமான காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடகாவில், சித்தராமையா அரசு பதவியேற்றதில் இருந்து முதலீடுகளுக்காக ஒரு திட்டத்தைக்கூட வகுக்கவில்லை, இரண்டரை ஆண்டுகளில் எந்தவொரு நிறுவனமும் பெரிய முதலீடுகளை அறிவிக்கவில்லை. பல வெளிநாட்டு நிறுவனங்கள், கர்நாடகத்தில் கால் வைக்கவே யோசிக்கின்றன. பல ஆண்டுகளாக தென்னிந்தியாவின் பொருளாதார இதயமாக தமிழகமும், கர்நாடகும் திகழ்ந்து வந்தன.
ஆந்திராவை நோக்கி படையெடுப்பு
பெங்களூரு இந்தியாவின் டிஜிட்டல் மையம், சென்னை தொழில்துறையின் முதுகெலும்பாக திகழ்ந்தது. ஆனால் இன்று அந்த இடத்தை பிடித்து இருப்பது ஆந்திரா. கர்நாடகாவில் கட்டைமைப்பு ரீதியாக ஒரு பிரச்சினை இருக்கிறது. காங்கிரசில் நிலவும் அதிகார போட்டி, கோஷ்டி மோதல்கள், விரைவான முதலீட்டு வீழ்ச்சியை ஏற்படுத்தி விட்டன. எனவே, வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆந்திராவை நோக்கி முதலீட்டாளர்கள் படையெடுக்கிறார்கள்.
பிளாக்பக் நிறுவனம் கர்நாடகாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த உடன், ஆந்திர தொழில்துறை அமைச்சர் அந்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு முதலீட்டை தனது மாநிலத்திற்கு அழகாக கொண்டு சென்று விட்டார்.
தமிழகம் - சட்டம் ஒழுங்கு சீர்குலைவு
இந்தப் பக்கம் தமிழகத்தை பார்த்தால், திமுக ஆட்சியின் கீழ் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளால் தத்தளிக்கிறது, அதன் விளைவாக வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள், பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டாலும், முதலீடுகள் வரிவில்லை. மாநில கருவூலத்திற்கு தான் நிதி சுமையை அதிகரிக்க செய்து இருக்கிறது.
தென்னிந்தியாவின் வளர்ச்சியில் ஆந்திரா
எனவே, இப்போது தென்னிந்தியாவின் வளர்ச்சி என்பது பாரம்பரியமாக கோலோச்சும் தமிழகம், கர்நாடகாவால் கட்டியெழுப்ப படவில்லை. இதற்கு காரணம், திமுகவும், காங்கிரசும் தான். இரட்டை எஞ்சின் அரசால் நிர்வகிக்கப்படும் ஆந்திர மாநிலம், வேகம், தெளிவு, உறுதித்தன்மை காரணமாக தென்னிந்தியாவின் அடையாளமாக உருவெடுத்து வருகிறது. இந்த இடத்தை தமிழகம் மீண்டும் பிடிக்க வேண்டும் என்றால், அதற்கு நீண்ட காலம் பிடிக்கும். சாத்தியமில்லாமலும் போகலாம்.
=================