ISRO announced that PSLV C62 EOS N1 Mission Failed rocket, which launched with 18 satellites, did not reach its target ISRO
இந்தியா

இலக்கை எட்டாத PSLV-C62 ராக்கெட் : என்ன காரணம்? தரவுகளை ஆயும் இஸ்ரோ

PSLV C62 EOS N1 Mission Failed News in Tamil : 18 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த PSLV-C62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Kannan

விண்வெளியின் இந்தியா சாதனை

PSLV C62 EOS N1 Mission Failed News in Tamil : இந்தியாவிற்கான தொலை தொடர்பு, வழிக்காட்டுதல் செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி . எல்விஎம் 3 போன்ற ராக்கெட்டுகளை கொண்டு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தி நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறது.

அதேபோல், வணிக ரீதியான பல செயற்கைக்கோள்களையும் அனுப்புகிறது.

18 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி

EOS-N1 செயற்கைக்கோள் உள்பட 16 செயற்கைக்கோள்களுடன் PSLV-C62 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர் என்ற சிறிய செயற்கைக்கோள் மற்றும் மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது.

இலக்கை எட்டாத ராக்கெட்

முதல் இரண்டு கட்டங்களை வெற்றிகரமாக தாண்டிய ராக்கெட், மூன்றாவது கட்டத்தில் தரைதளத்தின் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதால், பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை எட்டவில்லை என்பதை இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்தார்.

தரவுகளை ஆயும் இஸ்ரோ

3வது நிலையில் சில இடையூறு ஏற்பட்டு ராக்கெட்டின் பாதை மாறிவிட்டது. திட்டம் தோல்வி அடைந்ததை அடுத்து தரவுகளை ஆராய்ந்து வருகிறோம் எனவும் இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.