ISRO Bluebird Satellite Launch Tomorrow in Sriharikota Latest Update in Tamil Google
இந்தியா

Bluebird : இஸ்ரோவின் அடுத்த முயற்சி- புளூபேர்ட் செயற்கைகோள் தயார்!

ISRO Bluebird Satellite Launch in Sriharikota : தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும் விதமாக இஸ்ரோவில் இருந்து புளூபேர்ட் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

Baala Murugan

புளூபேர்ட் செயற்கைகோள் கவுண்டவுன் தொடக்கம்

ISRO Bluebird Satellite Launch in Sriharikota : ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (டிசம்பர் 24) காலை 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான 24 மணி நேர கவுன்டவுன் இன்று (டிசம்பர் 23) காலை 8.54 மணிக்கு தொடங்கியது.

புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, நாளை டிசம்பர் 24ம் தேதி காலை, 8:54 மணிக்கு, எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஏவுதளத்தில் செயற்கைக்கோள் தயாராக இருக்கும் படத்தை இஸ்ரோ சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

தொலைதூர இணையதள சேவைகளுக்காக இஸ்ரோவின் முயற்சி

விண்ணில் ஏவுவதற்கான 24 மணி நேர கவுன்டவுன் இன்று (டிசம்பர் 23) காலை 8.54 மணிக்கு தொடங்கிய நிலையில், இந்த 'புளூபேர்ட்' செயற்கைக்கோளை அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கி இருக்கிறது. இதன் எடை 6,500 கிலோ. இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும்.

இந்த செயற்கைக்கோளை, நம் நாட்டின், 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், விண்ணில் செலுத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னதாகவே, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது செயற்கைகோள் ஏவப்படஉள்ளது. இஸ்ரோவின் தொடர் முயற்சிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு செயற்கோள் வெற்றி பெற பலரும் வாழ்த்து தெரவித்து வருகின்றனர்.