காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை “திருடர்களின் தலைவர்” (Choron Ka Sardar) மற்றும் “Commander-in-Chief of Thieves” என விமர்சித்ததாகக் கூறி தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை விமர்சித்து பேசியபோது ராகுல் காந்தி இந்த கருத்துக்களை தெரிவித்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பொதுக்கூட்ட பேச்சுடன் தொடர்புடைய காணொளியையும் அவர் தனது சமூக வலைதள கணக்கில் பகிர்ந்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் அவர் வழக்கு தொடர்ந்ததிற்கான காரணம் பிரதமர் மோடியை ராகுல் காந்தி தொடர்ந்து அவுதுரு பரப்பி வருகின்றார் எனவும் இந்த போக்கை அவர் கைவிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார் .
இந்த சம்மனை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.
ஆனால் கீழமை நீதிமன்ற உத்தரவில் எந்த சட்டவிரோதமும் அல்லது குறையும் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி என்.ஆர். போர்கர், மனுவை தள்ளுபடி செய்தார்.
இதன் மூலம் அவதூறு வழக்கு தொடர்ந்து நடைபெற வழிவகுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வகையில், கீழமை நீதிமன்ற விசாரணையை மேலும் ஆறு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற முந்தைய இடைக்கால உத்தரவை உயர்நீதிமன்றம் தொடர்ந்துள்ளது.
===============