தமிழகம், புதுச்சேரி தேர்தல்
Jagadrakshagan has stirred up a new storm by claiming that the DMK is the one affected by the Congress party's knee-jerk reaction to the seats it won in the last election in Puducherry : தமிழக சட்டமன்ற தேர்தலோடு, யூனியன் பிரேதசமாக புதுச்சேரியும் தேர்தலை எதிர்கொள்கிறது. இரண்டு மாநிலங்களிலும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
திமுக புதிய வியூகம்
தமிழகத்தை போலவே, புதுச்சேரியில் கூட்டணியில் குடைச்சல்களுக்கு பஞ்சமே இல்லை. 30 தொகுதிகளிலும் போட்டி, திமுக ஆட்சி, தேவைப்பட்டால் காங்கிரசுக்கு ஓரிரண்டு தொகுதிகள் என்ற கொள்கையோடு திமுக காய்நகர்த்தி வருகிறது.
ஆனால், நாராயணசாமி தலைமையில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இந்தமுறையும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறது.
காங்கிரசை ஒதுக்கும் திமுக
புதுச்சேரியில் திமுக நிர்வாகிகள் பகிரங்கமாவே காங்கிரசை எதிர்க்க தொடங்கி விட்டனர்.
திமுக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன், புதுச்சேரியில் திமுக முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
முதல்வர் வேட்பாளர் ஜெகத்ரட்சகன்?
இதை உறுதிப்படுத்தும் வகையில், முத்தியால்பேட்டை, உப்பளம் தொகுதிகளில் நடைபெற்ற திமுகவின் செயல்வீரர்கள் கூட்டத்தில், திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான ஜெகத்ரட்சகன் எம்.பி பங்கேற்றார்.
திமுக அரசை விரும்பும் மக்கள்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”தமிழகத்தில் திமுக அரசின் நலத் திட்டங்கள் அனைத்தையும் புதுச்சேரிக்கும் கொண்டு வரப்பட வேண்டும் என்று இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர்.
30 இடங்களிலும் திமுக போட்டி!
புதுச்சேரியில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் 20 இடங்களை கேட்பது பற்றி கேட்கிறீர்கள். இங்குள்ள 30 தொகுதிகளிலும் திமுக போட்டியிட வேண்டும் என்பதே எங்களின் ஆசை.
திமுக தலைமையில் கூட்டணி
மற்றவர்கள் சொல்வது எதையும் கேட்காதீர்கள். முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசி முடிவெடுப்போம். புதுச்சேரியில் கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது என்று முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தியுடன் பேசி முடிவெடுப்பார்கள்.
காங்கிரசாருக்கு நன்றியுணர்வு வேண்டும்
ஸ்டாலின் பெருந்தன்மையோடு, ‘ராகுல் காந்தியை பிரதமராக்குவேன்’ என்று சொன்னார். அந்த நன்றி உணர்வை காங்கிரஸார் அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். திமுக போன்று நட்புடன் கூட்டணியை மதிப்பது உலகத்தில் எந்தக் கட்சியும் கிடையாது.
30 தொகுதிகளிலும் உதய சூரியன்
மாணிக்கம் தாகூர் பேசுவதை பொருட்படுத்தவே வேண்டாம். 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்து போட்டியிட்டு இருந்தால், 30 தொகுதிகளிலும் உதயசூரியன் உதித்து இருக்கும்.
காலில் விழுந்த காங்கிரசார்
ஆனால், காங்கிரசார் கையில், காலில் விழுந்து தொகுதி பங்கீட்டை முடித்து விட்டார்கள். இதனால் திமுகவுக்கு தான் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இந்த முறை திமுக ஏமாறாது” இவ்வாறு ஜெகத்ரட்சகன் பேட்டியளித்தார்.
===============